ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

எலிமினேட்டரில் கௌஸ், ஸ்டீவ் ஸ்மித் சதம்: 266 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது வாஷிங்டன் ஃபிரீடம்!

எம்எல்சி டி20 கிரிக்கெட் லீக் தொடரின் எலிமினேட்டரில் வென்ற வாஷிங்டன் ஃபிரீடம் அணி குறித்து...

Andries Gous, Steve Smith.

ஆண்ட்ரீஸ் கௌஸ், ஸ்டீவ் ஸ்மித். - படங்கள்: எக்ஸ் / எம்எல்சி

Published On :16 ஜூலை 2026, 2:54 pm IST

எம்எல்சி டி20 கிரிக்கெட் லீக் தொடரில் எலிமினேட்டரில் வாஷிங்டன் ஃபிரீடம் அணி 266 ரன்களை சேஸ் செய்து, எம்ஐ நியூயார்க் அணியை வீழ்த்தி, வரலாறு படைத்தது.

ஆக்லாந்து திடலில் இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வாஷிங்டன் ஃபிரீடம் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த எம்ஐ நியூயார்க் அணி 20 ஓவர்களில் 266/9 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக நிகோலஸ் பூரன் 106 ரன்கள் (33 பந்துகளில்) குவித்து அசத்தினார். மேலும், கைரன் பொல்லார்டு 64 ரன்கள் (25 பந்துகளில்), டிகாக் 51 ரன்களும் எடுத்து அசத்தினார்கள்.

வாஷிங்டன் ஃபிரீடம் அணி சார்பில் ரச்சின் ரவீந்திரா 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். அடுத்து பேட்டிங் செய்த இந்த அணி 18.4 ஓவர்களில் 270/4 ரன்கள் குவித்து வென்றது. இதில் அதிகபட்சமாக ஆண்ட்ரீஸ் கௌஸ் 132 ரன்கள் (51 பந்துகளில்) எடுத்து அசத்தினார்.

அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து 48 பந்துகளில் 110 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்டார். மேக்ஸ்வெல் சிக்ஸர் அடித்து வெற்றியடைய செய்தார்.

ஸ்டீவ் ஸ்மித் - ஆண்ட்ரீஸ் கௌஸ் 241 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். நியூயார்க் சார்பில் ஷகிப் அல் ஹசன் 2 விக்கெடுகள் எடுத்தார்.

இதுதான் டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிகபட்சமாக சேஸ் செய்யப்பட்ட இலக்காக இருக்கிறது. அடுத்ததாக, வாஷிங்டன் ஃபிரீடம் நாளை சான்பிரான்சிஸ்கோ யுனிகார்ன்ஸ் உடன் சேலஞ்சர்ஸில் மோதுகிறது.

Summary

Gous and Steve Smith hit centuries in the Eliminator: Washington Freedom make history by chasing down 266 runs in Major League Cricket 2026

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.