ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

உலகக் கோப்பை தோல்வியை மறக்க லார்ட்ஸ் டெஸ்ட் வெற்றி உதவும்: ஹர்மன்பிரீத் கௌர்

லார்ட்ஸில் நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட்டில் வெற்றி பெறுவது டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஏற்பட்ட ஏமாற்றத்தை மறக்க உதவும் என இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் தெரிவித்துள்ளார்.

Captain Harmanpreet Kaur

கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் - படம் | பிசிசிஐ

Published On :9 ஜூலை 2026, 8:00 pm IST

லார்ட்ஸில் நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட்டில் வெற்றி பெறுவது டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஏற்பட்ட ஏமாற்றத்தை மறக்க உதவும் என இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் தெரிவித்துள்ளார்.

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. இந்த உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணி குரூப் ஸ்டேஜ் சுற்றுடனேயே வெளியேறியது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைவடைந்த நிலையில், இந்தியா - இங்கிலாந்து இடையேயான வரலாற்று சிறப்பு மிக்க டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் திடலில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஏற்பட்ட ஏமாற்றத்தை மறந்து மீண்டும் தன்னம்பிக்கையை வளர்க்க லார்ட்ஸ் டெஸ்ட்டில் வெற்றி பெறுவது உதவியாக இருக்கும் என இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இங்கிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் போட்டி எங்களுக்கு மிகப் பெரிய தருணமாக இருக்கும் என நினைக்கிறேன். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் அணிக்கு அது சிறப்பானதாக இருக்கும். டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வெளியேறிய பிறகு, அணியில் உள்ள அனைவரும் சோகமாக இருந்தோம். அதனால், இந்த டெஸ்ட் போட்டியின் மூலம் மீண்டும் தன்னம்பிக்கையை அதிகரித்துக் கொள்ள நினைக்கிறோம்.

சில நேரங்களில் நாம் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லையென்றால், சற்று தன்னம்பிக்கை குறைந்ததாக உணர்வோம். அதனால், இந்த டெஸ்ட் போட்டி எங்களுக்கு மிகவும் முக்கியமானது. ஒரு அணியாக சிறப்பாக செயல்பட்டு இழந்த தன்னம்பிக்கையை மீண்டும் கொண்டுவருவோம் என்றார்.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டி லார்ட்ஸில் நாளை (ஜூலை 10) தொடங்குகிறது. இந்தியா - இங்கிலாந்து இடையேயான இந்த டெஸ்ட் போட்டி லார்ட் திடலில் நடைபெறும் முதல் மகளிர் டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Indian team captain Harmanpreet Kaur has stated that winning the historic Test match at Lord's would help put behind the disappointment of the T20 World Cup campaign.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.