உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் ஒரு பகுதியாக இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
இந்திய அணி அடுத்த மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
அண்மையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, அபார வெற்றி பெற்றது. இலங்கை அணி தற்போது மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், இரண்டாவது போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் இலங்கை அணி உள்ளது.
Mark your calendars ðï¸
— BCCI (@BCCI) July 2, 2026
Presenting #TeamIndia's schedule for the two-match Test series against Sri Lanka, starting August 15 ð#SLvIND pic.twitter.com/FoUEaUb3Qe
இந்த நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் ஒரு பகுதியாக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா - இலங்கை அணிகள் மோதிக்கொள்ளவுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இந்திய அணி கடைசியாக கடந்த 2017 ஆம் ஆண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அந்த தொடரை 3-0 என முழுமையாகவும் கைப்பற்றி அசத்தியது. அதன் பின், 8 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
இந்தியா மற்றும் இலங்கை என இரண்டு அணிகளுக்குமே இந்த டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியமானது. இந்த தொடரின் முடிவைப் பொறுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் மாற்றம் ஏற்படும். தற்போது தரவரிசையில் இந்திய அணி 5-வது இடத்திலும், இலங்கை அணி 6-வது இடத்திலும் உள்ளன.
Summary
As part of the World Test Championship cycle, the Indian team is set to tour Sri Lanka to play a Test series.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.












