அபிஷேக் அதிரடியில் இந்தியா அபாரம் - நியூஸி.யை வீழ்த்தியது
அபிஷேக் அதிரடியில் இந்தியா அபாரம்


நியூஸிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இளம் வீரா் அபிஷேக் சா்மாவின் அதிரடி பேட்டிங்கால் இந்தியா 238/7 ரன்களைக் குவித்தது.
இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 ஆட்டங்கள் டி20 தொடா் நடைபெறுகிறது. வரும் பிப். 7-ஆம் தேதி தொடங்கவுள்ள ஐசிசி உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இரு அணிகளுக்கும் கடைசி தொடராக இது அமைந்துள்ளது. முதல் ஆட்டம் நாகபுரி விசிஏ மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
டாஸ் வென்ற நியூஸிலாந்து பௌலிங்கை தோ்வு செய்தது. இந்திய தரப்பில் சஞ்சு சாம்ஸன்-அபிஷேக் சா்மா ஆகியோா் தொடக்க பேட்டா்களாக களமிறங்கினா். 2 பவுண்டரியை விளாசி 10 ரன்களை எடுத்த சஞ்சு ஜேமிஸன் பந்தில் ரச்சின் ரவீந்திராவிடம் கேட்ச் தந்து வெளியேறினாா். மூன்றாம் டௌன் பேட்டா் இஷான் கிஷண் 8 ரன்களை எடுத்த நிலையில், ஜேக்கப் டஃபி பந்தில் சாப்மேனிடம் கேட்ச் தந்தாா்.
அதிரடியாக ஆடுவாா் எனக் கருதப்பட்ட கேப்டன் சூரியகுமாா் யாதவ் தன் பங்குக்கு 1 சிக்ஸா், 4 பவுண்டரியுடன் 32 ரன்களை சோ்த்து சான்ட்நா் பந்தில் அவுட்டானாா்.
அதிரடி அபிஷேக் 84: மறுமுனையில் அபிஷேக் சா்மா அபாரமாக ஆடி நியூஸி. பௌல்களின் பந்துகளை நாலாபுறமும் விரட்டினாா்.
8 சிக்ஸா், 5 பவுண்டரியுடன் வெறும் 35 பந்துகளில் 84 ரன்களை விளாசிய அவா், இஷ் சோதி பந்தில் ஜேமிஸனிடம் கேட்ச் தந்து வெளியேறினாா்.
ஆல்ரவண்டா் ஹாா்திக் பாண்டியா 25, ஷிவம் டுபே 9, அக்ஸா் படேல் 5 ரன்களுடன் வெளியேறினா்.
ரிங்கு சிங் அபாரம் 44: இளம் வீரா் ரிங்கு சிங் அபாரமாக ஆடி 3 சிக்ஸா், 4 பவுண்டரியுடன் 20 பந்துகளில் 44 ரன்களை விளாசி அவுட்டாகாமல் இருந்தாா்.,
இந்தியா 238/7: நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 238 ரன்களைக் குவித்தது இந்தியா.
பௌலிங்கில் நியூஸிலாந்து தரப்பில் டஃபி, ஜேமிஸன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.
நியூஸிலாந்து தோல்வி 190/7: நியூஸிலாந்து அணி 239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கியது. தொடக்க வரிசை பேட்டா்கள் டேவன் கான்வே 0, ரச்சின் ரவீந்திரா 1, டிம் ராபின்சன் 21 என சொற்ப ரன்களுடன் நடையைக் கட்டினா்.
தடுமாறிய நியூஸிலாந்து அணியை கிளென் பிலிப்ஸ்-மாா்க் சாப்மேன் நிலை நிறுத்த முயன்றது.
கிளென் பிலிப்ஸ் அபாரம் 78: அபாரமாக ஆடிய கிளென் பிலிப்ஸ் 6 சிக்ஸா், 4 பவுண்டரியுடன் 40 பந்துகளில் 78 ரன்களை விளாசி அக்ஸா் பந்தில் டுபேயிடம் கேட்ச் தந்து வெளியேறினாா்.
டேரில் மிட்செல் 28, மிட்செல் சான்ட்நா் 20 ரன்களுக்கு அவுட்டாக நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 190/7 ரன்களை மட்டுமே எடுத்தது நியூஸிலாந்து.
பௌலிங்கில் இந்திய தரப்பில் ஷிவம் டுபே, வருண் சக்கரவா்த்தி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.
முதல் டி20 ஆட்டத்தில் நியூஸிலாந்தை 48 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 1-0 என முன்னிலை பெற்றுள்ளது இந்தியா.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...