மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தோல்வி எதிரொலி..! பாகிஸ்தான் கேப்டனின் குடும்பத்தை வசைபாடும் ரசிகர்கள்!

டி20 உலகக் கோப்பை தோல்வியினால் பாகிஸ்தான் அணி கேப்டனின் குடும்பம் இழிவுப்படுத்தப்படுவது குறித்து...

News image

பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகா. - படம்: ஏபி

Updated On :25 பிப்ரவரி 2026, 10:25 am

டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 8 சுற்றில் பாகிஸ்தான் அணி இலங்கையிடம் தோல்வியுற்றது.

இந்தக் காரணத்தினால், அந்நாட்டு ரசிகர்கள் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகாவையும் அவரது குடும்பத்தையும் தரம்தாழ்ந்து விமர்சித்து வருகிறார்கள்.

சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 164/9 ரன்கள் எடுத்தது.

அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 19.1 ஓவர்களில் 166/8 ரன்கள் எடுத்து வென்றது.

ஏற்கெனவே முதல் போட்டி மழையினால் கைவிடவே பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குத் தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

குரூப் 2-ல் இங்கிலாந்து முன்னேறியதால், மீதமிருக்கும் ஓரிடத்துக்கு மூன்று அணிகள் போட்டியிடுகின்றன.

குரூப் சுற்றிலேயே பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் தோல்வியுற்றது அந்த நாட்டில் சலசலப்பை ஏற்படுத்தியது.

தற்போது, முக்கியமான போட்டியிலும் தோல்வியுற்றதால் பாகிஸ்தான் ரசிகர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளார்கள்.

அணியின் கேப்டன் சல்மா அகாவையும் அவரது மகன், மனைவியையும் குறிவைத்து சமூக வலைதளத்தில் மோசமான வார்த்தைகளால் விமர்சித்து வருகிறார்கள்.

இது குறித்து சல்மான் அகா தனது இன்ஸ்டா பக்கத்தில், “என்னையும் எனது மகனையும் கொச்சைப்படுத்துவதால் உங்களுக்கு உலகக் கோப்பை கிடைக்கப்போவதில்லை பாகிஸ்தான் ரசிகர்களே” எனப் பதிவிட்டுள்ளார்.

Summary

Pakistani fans target Salman Agha's wife and son after heartbreaking loss to England.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.