டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சூப்பர் 8 சுற்றுக்கு 7 அணிகள் தகுதி; கடைசி இடம் யாருக்கு?

டி20 உலகக் கோப்பைத் தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு 7 அணிகள் தகுதி பெற்றுவிட்ட நிலையில், கடைசி அணியாக எந்த அணி தகுதிபெறப் போகிறது என்பது தொடர்பாக...

News image
Updated On :17 பிப்ரவரி 2026, 3:35 pm

இணையதளச் செய்திப் பிரிவு

டி20 உலகக் கோப்பைத் தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு 7 அணிகள் தகுதி பெற்றுவிட்ட நிலையில், கடைசி அணியாக எந்த அணி தகுதிபெறப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரின் 10-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

சூப்பர் 8 சுற்றுக்கு குரூப் ஏ பிரிவிலிருந்து இந்தியா, குரூப் பி பிரிவிலிருந்து இலங்கை மற்றும் ஜிம்பாப்வே, குரூப் சி பிரிவிலிருந்து மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இங்கிலாந்து, குரூப் டி பிரிவில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய 7 அணிகள் தகுதி பெற்றுள்ளன.

குரூப் பி, குரூப் சி, குரூப் டி பிரிலிருந்து தலா இரண்டு அணிகள் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்ட நிலையில், குரூப் ஏ பிரிவிலிருந்து இந்திய அணி மட்டும் தகுதி பெற்றுள்ளது. குரூப் ஏ பிரிவில் இரண்டாவது அணியாக தகுதி பெற பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா இடையே போட்டி நிலவுகிறது.

பாகிஸ்தான் அணி கொழும்பில் நாளை (பிப்ரவரி 18) நடைபெறும் போட்டியில் நமீபியாவை எதிர்த்து விளையாடுகிறது. இந்தப் போட்டியின் முடிவைப் பொருத்தே, சூப்பர் 8 சுற்றுக்கு கடைசி அணியாக யார் தகுதி பெறுவார்கள் என்பது தெரிய வரும்.

நமீபியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால், 6 புள்ளிகளுடன் எளிதில் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிவிடும். அதேபோல, மழை காரணமாக போட்டி நடைபெறாமல் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டாலும், பாகிஸ்தான் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடும்.

YouTube video thumbnail

இந்தப் போட்டியில் நமீபியா அணி பாகிஸ்தானை வீழ்த்தும் பட்சத்தில், அமெரிக்க அணி நெட் ரன் ரேட் அடிப்படையில் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற அதிக வாய்ப்பிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.