வில் ஜாக்ஸ் அதிரடி: இத்தாலிக்கு 203 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து!
டி20 உலகக் கோப்பைத் தொடரில் இத்தாலிக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் எடுத்துள்ளது.


டி20 உலகக் கோப்பைத் தொடரில் இத்தாலிக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் எடுத்துள்ளது.
ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் இத்தாலி அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
வில் ஜாக்ஸ் அதிரடி; இத்தாலிக்கு 203 ரன்கள் இலக்கு!
டாஸ் வென்று முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிரடியாக விளையாடிய வில் ஜாக்ஸ் 22 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, டாம் பேண்டன் 30 ரன்கள், பில் சால்ட் 28 ரன்கள், சாம் கரண் 25 ரன்கள் மற்றும் ஜேக்கோப் பெத்தேல் 23 ரன்கள் எடுத்தனர்.
இத்தாலி தரப்பில் கிராண்ட் ஸ்டீவர்ட் மற்றும் கிறிஷான் கலுகாமேஜ் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஜேஜே ஸ்மட்ஸ், அலி ஹாசன் மற்றும் பென் மனேண்ட்டி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இத்தாலி அணி விளையாடி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...