டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

டி20 உலகக் கோப்பை: இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் 3 நிபந்தனைகள்!

இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் விதித்த 3 நிபந்தனைகள் பற்றி...

News image
கோப்புப்படம்
Updated On :9 பிப்ரவரி 2026, 5:19 am

இணையதளச் செய்திப் பிரிவு

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடனான போட்டியில் விளையாட மூன்று நிபந்தனைகளை ஐசிசிக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகின்றன. கொழும்புவில் நடைபெறும் போட்டியில் பிப். 15 ஆம் தேதி இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ளன.

ஆனால், வங்கதேச அணியை உலகக் கோப்பை தொடரில் இருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தியாவுடனான போட்டியில் பாகிஸ்தான் விளையாடாது என்று அந்நாட்டு அரசு அறிவித்தது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானுக்கு பயணம் செய்த ஐசிசி துணைத் தலைவர் இம்ரான் கவாஜா மற்றும் பிரதிநிதி முபஷிர் உஸ்மானி ஆகியோர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரும் அமைச்சருமான மொஹ்சின் நக்வியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

அப்போது இந்தியாவுடனான போட்டியில் விளையாட மூன்று நிபந்தனைகளை ஐசிசிக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விதித்துள்ளது.

தொடர் வருவாயில் அதிக பங்கு, இந்தியாவுடன் இருதரப்பு போட்டிகளை தொடங்க ஐசிசியின் உதவி மற்றும் பாகிஸ்தானுடன் விளையாடும்போது இந்திய வீரர்கள் மரபுபடி கைக்குலுக்க வேண்டும் ஆகிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

மேலும், வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவரும், தங்கள் நாட்டுக்கு ஐசிசி தொடர் நடத்த வாய்ப்பளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

தற்போது பாகிஸ்தானின் கோரிக்கை தொடர்பாக ஐசிசி மற்றும் பிசிசிஐ நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, 24 மணிநேரத்தில் பாகிஸ்தான் பிரதமருடன் ஆலோசனை நடத்தியப் பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இறுதி முடிவை அறிவிக்கும் எனத் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.