டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

யு19 உலகக் கோப்பை: 6ஆவது முறையாக இந்தியா சாம்பியன்

யு19 உலகக் கோப்பை தொடரை இந்தியா வென்று அசத்தியுள்ளது.

News image
- (Photo | BCCI, X)
Updated On :7 பிப்ரவரி 2026, 10:01 am

இணையதளச் செய்திப் பிரிவு

யு19 உலகக் கோப்பை தொடரை 6ஆவது முறையாக வென்று இந்தியா அசத்தியுள்ளது.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் இன்று நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

அபாரமாக விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 411 ரன்கள் குவித்தது. இந்திய தரப்பில் அதிகபட்சமாக சூர்யவன்ஷி 80 பந்துகளில் 175 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 15 பவுண்டரிகள் மற்றும் 15 சிக்ஸர்கள் அடங்கும்.

பந்துவீச்சில் இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் மிண்டோ 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். செபஸ்டியன் மோர்கன் மற்றும் அலெக்ஸ் கிரீன் தலா இரண்டு விக்கெட்டுகளையும், லம்ஸ்டன் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். 412 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி களமிறங்கியது.

ஆனால் இந்திய வீரர்களின் பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து அணி 40.2 ஓவர்களில் 311 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா 6ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக காலேப் மேத்யூ ஃபல்கனர் அதிரடியாக விளையாடி 67 பந்துகளில் 115 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அம்ப்ரீஷ் 3, கனிஷ்க் சௌஹான் 2, தீபேஷ் தேவேந்திரன் 2 விக்கெட்டுகள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினர்.

summary

India have been crowned the champions of the ICC Under-19 Men’s Cricket World Cup 2026, winning their sixth U-19 title.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.