டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

யு19 உலகக் கோப்பை: சேஸிங்கில் சாதனையுடன் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

யு19 உலகக் கோப்பை அரையிறுதியில் வென்ற இந்திய அணி குறித்து...

News image
சதமடித்த யு19 இந்திய வீரர் ஆரோன் ஜார்ஜ். - படம்: பிசிசிஐ.
Updated On :4 பிப்ரவரி 2026, 3:00 pm

இணையதளச் செய்திப் பிரிவு

யு19 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வென்றது.

யு19 உலகக் கோப்பை வரலாற்றிலேயே அதிகபட்ச இலக்கை சேஸ் செய்த அணியாக இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

முதலில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டி செய்து 50 ஓவர்களில் 310/4 ரன்கள் குவித்தது.

இந்த அணியில் ஃபைசல் ஷினோஜடா (110), உசைருல்லாஹ் நியாசாய் (101*) சதமடித்து அசத்தினார்கள்.

அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக அரைசதம் அடித்து 33 பந்துகளில் 68 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

கேப்டன் ஆயுஷ் மாத்ரே 63 ரன்களுக்கு ஆட்டமிழக்க, தொடக்க வீரர் ஆரோன் ஜார்ஜ் சதமடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார்.

இறுதியில் ஆரோன் ஜார்ஜ் 115 ரன்களுக்கு ஆட்டமிழக்க, விஹான் மல்ஹோத்ரா 38 ரன்களுடனும் வேதாந்த் திரிவேதி 5 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

இந்தப் போட்டியில் வென்றதுடன் யு19 உலகக் கோப்பையின் நாக் அவுட் போட்டிகளில் அதிகபட்ச இலக்கை சேஸ் செய்த முதல் அணியாக இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

இந்த வெற்றியுடன் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு 10-ஆவது முறையாக முன்னேறி அசத்தியுள்ளது.

இங்கிலாந்துடன் இறுதிப் போட்டி வரும் வெள்ளிக்கிழமை (பிப்.6) மதியம் 1 மணிக்கு ஜிம்பாப்வேயில் தொடங்கவிருக்கிறது.

யு19 உலகக் கோப்பையில் வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்குகள்

311 - இந்தியா - ஆப்கானிஸ்தானுக்கு எதிராக (2026)

305 - நியூசிலாந்து - அயர்லாந்துக்கு எதிராக (2006)

294 - தெ.ஆ. - வங்க தேசத்துக்கு எதிராக (2022)

292 - மே.இ.தீ - இலங்கைக்கு எதிராக (2010)

279 - மே.இ.தீ. - அயர்லாந்துக்கு எதிராக (2018)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.