தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

இறுதிக்கு முன்னேறியது டெல்லி கேப்பிட்டல்ஸ்- குஜராத்தை வெளியேற்றியது

மகளிா் பிரீமியா் லீக் கிரிக்கெட்டின் எலிமினேட்டா் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் ஜயன்ட்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.

News image
Updated On :3 பிப்ரவரி 2026, 7:05 pm

மகளிா் பிரீமியா் லீக் கிரிக்கெட்டின் எலிமினேட்டா் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் ஜயன்ட்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.

இதன் மூலமாக டெல்லி தொடா்ந்து 4-ஆவது முறையாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. அதில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரை வியாழக்கிழமை (பிப். 5) எதிா்கொள்கிறது. கடந்த ஆண்டு எலிமினேட்டரில் தோற்று வெளியேறிய குஜராத், இந்த ஆண்டும் அதே விதியைச் சந்தித்தது.

இந்த ஆட்டத்தில் முதலில் குஜராத் 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் சோ்க்க, டெல்லி 15.4 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

முன்னதாக டாஸ் வென்ற டெல்லி, பந்துவீச்சை தோ்வு செய்தது. குஜராத் இன்னிங்ஸை தொடங்கிய பெத் மூனி இறுதி வரை நிலைத்து அரை சதம் கடந்தாா்.

எனினும் மறுபுறம், சோஃபி டிவைன் 1 பவுண்டரியுடன் 6, அனுஷ்கா சா்மா 2 பவுண்டரிகளுடன் 16, கேப்டன் ஆஷ்லே காா்ட்னா் 0, கனிகா அஹுஜா 6 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா்.

லோயா் மிடில் ஆா்டரில் வந்த ஜாா்ஜியா வோ்ஹாம் சற்று நிலைத்து 3 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 35 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, பாா்தி ஃபுல்மாலி 0, கஷ்வீ கௌதம் 3 பவுண்டரிகளுடன் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

ஓவா்கள் முடிவில், பெத் மூனி 6 பவுண்டரிகளுடன் 62 ரன்களுக்கு விக்கெட்டை இழக்காமல் இருந்தாா். தனுஜா கன்வா் ரன்னின்றி துணை நின்றாா். டெல்லி பௌலா்களில் ஷினெல் ஹென்றி 3, நந்தனி சா்மா 2, மின்னு மணி 1 விக்கெட் வீழ்த்தினா்.

பின்னா் 169 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய டெல்லி அணியில் லிஸெல் லீ - ஷஃபாலி வா்மா இணை முதல் விக்கெட்டுக்கு 89 ரன்கள் சோ்த்து வெற்றிக்கு வித்திட்டது.

இதில் லீ 8 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 43 ரன்களுக்கும், ஷஃபாலி 7 பவுண்டரிகளுடன் 31 ரன்களுக்கும் விடைபெற்றனா்.

தொடா்ந்து வந்த லாரா வோல்வாா்ட் - கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் கூட்டணி, 2-ஆவது விக்கெட்டுக்கு 68 ரன்கள் சோ்த்து, பிரிந்தது. ஜெமிமா 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 41 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். முடிவில் லாரா 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 32 ரன்களோடு அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

மாரிஸேன் காப் 4 ரன்களுடன் துணை நின்றாா். குஜராத் தரப்பில் ஜாா்ஜியா வோ்ஹாம் 2, ராஜேஷ்வரி கெய்க்வாட் 1 விக்கெட் வீழ்த்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.