டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

111 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி. தோல்வி; டி20 தொடரை முழுமையாகக் கைப்பற்றிய பாகிஸ்தான்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

News image
- படம் | AP
Updated On :1 பிப்ரவரி 2026, 2:33 pm

இணையதளச் செய்திப் பிரிவு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி லாகூரில் இன்று (பிப்ரவரி 1) நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் எடுத்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக சைம் ஆயுப் 56 ரன்களும், பாபர் அசாம் 50 ரன்களும் எடுத்தனர். அவர்களைத் தொடர்ந்து, ஷதாப் கான் 46 ரன்கள் எடுத்தார்.

ஆஸ்திரேலியா தரப்பில் பென் துவார்ஷூயிஸ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மேத்யூ குன்னமேன், மேத்யூ ஷார்ட், கூப்பர் கன்னோலி மற்றும் கேமரூன் கிரீன் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

பாகிஸ்தான் அபார வெற்றி

208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தானின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 96 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், பாகிஸ்தான் அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலிய அணியில் மார்கஸ் ஸ்டாய்னிஸ் அதிகபட்சமாக 23 ரன்கள் எடுத்தார். கேமரூன் கிரீன் 22 ரன்களும், ஜோஷ் பிலிப் 14 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.

பாகிஸ்தான் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது நவாஸ் 4 ஓவர்களில் வெறும் 18 ரன்களை விட்டுக் கொடுத்து, 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஷாகின் அஃப்ரிடி இரண்டு விக்கெட்டுகளையும், அப்ரார் அகமது மற்றும் நஷீம் ஷா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை பாகிஸ்தான் அணி 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது.

summary

In the final T20 match against Australia, the Pakistan team secured a spectacular victory by a margin of 111 runs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.