பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை நெருங்கும் ஆஸ்திரேலியா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை நெருங்கும் ஆஸ்திரேலிய அணியைப் பற்றி...

ஆஸ்திரேலிய அணியினர்.

Published On :23 ஆகஸ்ட் 2026, 5:37 pm IST

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையில் முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டிக்கு வேகமாக முன்னேறி வருகிறது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சியளித்த வங்கதேச அணி, இரண்டாவது போட்டியில் விளையாடியது.

மெக்கேவில் உள்ள கிரேட் பேரியர்ஸ் ரீஃப் கிரிக்கெட் திடலில் நேற்று (ஆக. 22) தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேச அணி 34 ஓவர்களில் 64 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 210 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது.

முதல் இன்னிங்ஸில் 146 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணியை, மிட்செல் ஸ்டார்க் மீண்டும் மிரட்டினார்.

வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் 36.3 ஓவர்களில் 95 ரன்கள் எடுத்து சுருண்டது. இதன் மூலம் இன்னிங்ஸ் மற்றும் 51 ரன்களில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள், இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் என மொத்தமாக 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய மிட்செல் ஸ்டார்க் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

முதல் போட்டியில் தோல்வியடைந்திருந்த ஆஸ்திரேலிய அணி, வங்கதேசத்துக்கு அதிர்ச்சியைக் கொடுத்து 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன் செய்தது. இந்த வெற்றியின் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப்போட்டிக்கு வேகமாக முன்னேறி வருகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில், 10 போட்டிகளில் 8 வெற்றி, 2 தோல்வியுடன் 80.00 சதவிகிதத்துடன் முதலிடத்தைப் பிடித்திருக்கும் ஆஸ்திரேலிய அணி வங்கதேச தொடருக்கு முன்னதாக 6 வெற்றிகள் தேவைப்பட்டன. அதில், வங்கதேசத்துக்கு எதிராக ஒரு போட்டியில் வெற்றிபெற்றிருக்கிறது. ஆஸ்திரேலிய அணிக்கு இன்னும், தென்னாப்பிரிக்கா, இந்தியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு எதிராக 12 போட்டிகளில் விளையாடவிருக்கிறது.

இந்தியாவுக்கு எதிராக மட்டும் 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் தொடரில் விளையாடவிருக்கிறது. மொத்தமுள்ள 12 போட்டிகளில் 5-ல் வெற்றி பெற்றால் மட்டுமே ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றுவிடும். இந்திய மண்ணில் கடைசியாக விளையாடியுள்ள 12 போட்டிகளில் வெறும் 2 போட்டிகளில் மட்டுமே ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றிருப்பதால் இந்தத் தொடர் இரண்டு அணிகளுக்கும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

The former champion Australian team is rapidly advancing towards the World Test Championship final.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.