மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

அலி உஸ்மான் வரலாற்றுச் சாதனை: வலுவான நிலையில் இங்கிலாந்து!

இங்கிலாந்து - பாகிஸ்தான் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குறித்து...

Ali Usman

அலி உஸ்மான் - படம்: எக்ஸ் / ஐசிசி

Published On :21 ஆகஸ்ட் 2026, 12:29 pm IST

இங்கிலாந்து - பாகிஸ்தான் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹெடிங்லியில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இங்கிலாந்துக்குச் சென்றுள்ளது. இதில் முதல் டெஸ்ட் ஆக.19 முதல் நடைபெற்று வருகிறது.

முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 171 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் இங்கிலாந்து சார்பில் ஜோஷ் டங், ஆலி ராபின்சன் தலா 5 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.

அடுத்து தனது முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை செய்துவரும் இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் முடிவில் 82 ஓவர்களில் 366/8 ரன்கள் குவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக ஹாரி புரூக் 91, ஜோர்டான் 73, ஜோ ரூட் 66 ரன்கள் எடுத்தார்கள்.

பாகிஸ்தான் சார்பில் சுழல்பந்துவீச்சாளர் அலி உஸ்மான் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். டெஸ்ட்டில் இதுதான் அவரது முதல் ஐந்து விக்கெட்டுகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து மண்ணில் பாகிஸ்தான் இடது கை சுழல் பந்து வீச்சாளர்களில் 5 விக்கெட்டுகள் எடுத்தவர்களிலும் இவர்தான் முதல்முறை என்பது வரலாறு படைக்கப்பட்டுள்ளது.

Summary

Ali Usman takes 5 wickets: England in a strong position!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.