ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மேக்ஸ்வெல் - வினி ராமன் தம்பதிக்கு பெண் குழந்தை!

கிளென் மேக்ஸ்வெல் மற்றும் அவரது மனைவி வினி ராமன் தம்பதியினருக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதைப் பற்றி...

மேக்ஸ்வெல் - வினி ராமன்.

Published On :20 ஆகஸ்ட் 2026, 12:11 pm IST

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் மற்றும் அவரது மனைவி வினி ராமன் தம்பதியினருக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ள செய்தியை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.

கிளென் மேக்ஸ்வெல் மற்றும் வினி ராமன் தம்பதியினர் முதன்முதலில் கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பரில் சந்தித்துக் கொண்டனர். ஆரம்பத்தில் நண்பர்களாகப் பழகிய இவர்கள், பின்னர் காதலிக்கத் தொடங்கினர்.

2020-ஆம் ஆண்டு பிப்ரவரியில் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பின்னர், 2022 ஆம் ஆண்டு மார்ச்சில் இருவரும் மெல்பர்னில் இருவீட்டார் முன்னிலையில் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பரில் பிறந்த லோகன் மேவரிக் மேக்ஸ்வெல் என்ற மகன் உள்ளான். இந்த நிலையில், மேக்ஸ்வெல் மற்றும் வினி ஜோடி அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளனர். இதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். மேலும், அவர்களின் பெண் குழந்தைக்கு மாயா மேக்ஸ்வெல் என்றும் பெயரிட்டுள்ளனர்.

கடந்த ஜூன் 2025-இல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்த மேக்ஸ்வெல், ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் 149 போட்டிகளில் விளையாடி 3,990 ரன்களையும், 77 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியுள்ளார்.

2015, 2023-ல் ஆஸ்திரேலியா உலகக் கோப்பையை வென்றதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். மேலும், 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான வாழ்வா? சாவா? போட்டியில் ஒற்றை ஆளாக 201 ரன்கள் குவித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியிருந்தார்.

Summary

Australian all-rounder Glenn Maxwell and his wife Vini Raman are blessed with their second child. They posted on Instagram together about the birth of their daughter, named Maia Maxwell.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.