ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

முதல் டெஸ்ட்: இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 460 ரன்கள் குவிப்பு!

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 460 ரன்கள் எடுத்துள்ளது.

Dhruv Jurel smashing the ball for a six.

பந்தை சிக்ஸருக்கு விளாசும் துருவ் ஜுரெல் - படம் | பிசிசிஐ

Published On :16 ஆகஸ்ட் 2026, 6:15 pm IST

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 460 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா - இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டி காலே திடலில் நேற்று (ஆகஸ்ட் 15) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்ஸில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் எடுத்திருந்தது. தேவ்தத் படிக்கல் 131 ரன்களுடனும், ரிஷப் பந்த் 27 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

முதல் இன்னிங்ஸில் 288 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்த இந்திய அணி, இன்று (ஆகஸ்ட் 16) இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தது. சிறப்பாக விளையாடிய தேவ்தத் படிக்கல் 150 ரன்களைக் கடந்தார். ரிஷப் பந்த் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். ரிட்டையர்டு ஹர்ட் ஆன கே.எல்.ராகுல் மீண்டும் பேட்டிங்குக்கு வந்து விளையாடினார். அவர் 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடி வந்த தேவ்தத் படிக்கல் 230 பந்துகளில் 167 ரன்கள் எடுத்தார். அதில் 15 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

பின் வரிசையில், துருவ் ஜுரெல் மற்றும் மானவ் சுதர் சிறிது பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினர். சிறப்பாக விளையாடிய துருவ் ஜுரெல் 68 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். மானவ் சுதர் 24 ரன்கள் எடுத்தார். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 460 ரன்கள் எடுத்துள்ளது.

இலங்கை தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா 4 விக்கெட்டுகளையும், கேஷரா நுவந்தா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அஷிதா ஃபெர்னாண்டோ ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

குல்தீப் யாதவ் 12 ரன்களுடனும், பிரஷித் கிருஷ்ணா ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

Summary

At the close of play on the second day of the first Test match against Sri Lanka, the Indian team has scored 460 runs for the loss of 9 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.