ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாபர் அசாம் விளையாடுவாரா?

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாபர் அசாம் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Babar Azam

பாபர் அசாம் - படம் | ஐசிசி

Published On :15 ஆகஸ்ட் 2026, 3:50 pm IST

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாபர் அசாம் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற ஆகஸ்ட் 19 ஆம் தேதி தொடங்குகிறது.

பிரதான போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக பாகிஸ்தான் அணி கவுன்ட்டி கிளப் செலக்ட் லெவன் அணிக்கு எதிராக பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. இந்தப் போட்டியின்போது, பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமுக்கு கையில் அடிபட்டது. அதன் காரணமாக அவர் தொடர்ந்து பேட்டிங் செய்யவில்லை.

இந்த நிலையில், கையில் அடிபட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமுக்கு பயிற்சி ஆட்டத்திலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

பாபர் அசாமுக்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை எனவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் விளையாடுவதில் எந்த பாதிப்பும் இல்லை எனத் தெரிகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுவதற்கான போட்டியில் நீடிக்க இந்த டெஸ்ட் தொடர் இரண்டு அணிகளுக்குமே மிகவும் முக்கியமானதாகும்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இங்கிலாந்து அணி 7-வது இடத்திலும், பாகிஸ்தான் அணி 8-வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Doubts have arisen as to whether Babar Azam will play in the Test series against England.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.