ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இந்தியா - இலங்கை பயிற்சி ஆட்டம்: ஒரே ஓவரில் 4 சிக்ஸர்கள் விளாசிய குர்னூர் பிரார்!

இலங்கைக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் குர்னூர் பிரார் ஒரே ஓவரில் 4 சிக்ஸர்கள் விளாசி அசத்தினார்.

Gurnoor Brar

குர்னூர் பிரார் - படம் | பிசிசிஐ

Published On :8 ஆகஸ்ட் 2026, 7:56 pm IST

இலங்கைக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் குர்னூர் பிரார் ஒரே ஓவரில் 4 சிக்ஸர்கள் விளாசி அசத்தினார்.

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

பிரதான போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக இந்தியா மற்றும் இலங்கை அணிகள் தங்களுக்குள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கிரிக்கெட் லெவன் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது.

முதலில் விளையாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 363 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ய, இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 357 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியில் தேவ்தத் படிக்கல் அதிகபட்சமாக 142 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். ரவீந்திர ஜடேஜா 63 ரன்கள் மற்றும் கேப்டன் கே.எல்.ராகுல் 40 ரன்கள் எடுத்தனர்.

தேவ்தத் படிக்கல்லுடன் குர்னூர் பிரார் களத்தில் உள்ளார். அவர் அதிரடியாக 18 பந்துகளில் 36 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். இரண்டாம் நாள் ஆட்டத்தின் கடைசி ஓவரை இலங்கை வீரர் திலும் சுதீரா வீசினார். அந்த ஓவரில் குர்னூர் பிரார் 4 சிக்ஸர்களை விளாசி அசத்தினார்.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் இலங்கையைக் காட்டிலும் 6 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Indian fast bowler Gurnoor Brar impressed by smashing four sixes in a single over during the warm-up match against Sri Lanka.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.