ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஷஃபிக் சதம், பாபர் அசாம் அசத்தல்: கடைசி டெஸ்ட்டில் பாகிஸ்தான் ஆதிக்கம்!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான பாகிஸ்தானின் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குறித்து...

Shafique, Babar Azam.

ஷஃபிக், பாபர் அசாம். - படம்: ஐசிசி

Published On :5 ஆகஸ்ட் 2026, 3:07 pm IST

பாகிஸ்தானுக்கு எதிரான மேற்கிந்தியத் தீவுகள் அணியின் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குயின்ஸ் பார்க்கில் ஆக.2ஆம் தேதி தொடங்கியது.

டாஸ் வென்ற மே.இ. தீவுகள் அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதில், அதிகபட்சமாக ஜஸ்டின் க்ரீவ்ஸ் 73, கேப்டன் ரோஸ்டன் சேஸ் 70 ரன்கள் அடித்தார்கள். பாகிஸ்தான் சார்பாக சஜித் கான் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

அடுத்து தனது முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கைத் தொடங்கிய பாகிஸ்தான் அணி 66 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 276 ரன்கள் குவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக அப்துல்லா ஷபிஃக் சதம் (107 ரன்கள்) குவித்து ஆட்டமிழக்காமல் இருக்கிறார்.

இவருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய பாபர் அசாம் 86 ரன்கள் எடுத்து சதம் அடிக்கும் நிலையில் இருக்கிறார். இருவருமே 100 ரன்களை 139 பந்துகளில் அடித்து அசத்தினார்கள். இருவரும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்கிறார்கள்.

தொடக்க வீரர் அஜானும் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். மீதம் 8 விக்கெட்டுகள் இருக்கும் நிலையில் இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வெல்ல அதிகமான வாய்ப்பிருக்கிறது.

முதல் போட்டியை வென்ற மே.இ. தீவுகள் அணிக்கு இந்தத் தொடரில் வெல்ல இந்தப் போட்டியை டிரா செய்தாலே போதுமானது என்பதும் கவனிக்கத்தக்கது.

Summary

Shafique and Babar Azam put Pakistan on top in 2nd cricket test against West Indies

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.