ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பாகிஸ்தானை வீழ்த்தி டி20 தொடரைக் கைப்பற்றிய இலங்கை அணி!

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை மகளிரணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Sri Lankan team players

இலங்கை அணி வீராங்கனைகள் - படம் | இலங்கை கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Published On :2 ஆகஸ்ட் 2026, 1:21 pm IST

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை மகளிரணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கை - பாகிஸ்தான் இடையேயான இரண்டாவது டி20 போட்டி டம்புல்லாவில் இன்று (ஆகஸ்ட் 2) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவகர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக ஷாவல் ஷுல்ஃபிகர் 35 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார். அதில் 8 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேப்டன் முனீபா அலி 45 ரன்கள் எடுத்தார். ஃபாத்திமா 30 ரன்கள், இமான் நசீர் 21 ரன்கள் மற்றும் சைரா ஜபீன் 16 ரன்கள் எடுத்தனர்.

இலங்கை தரப்பில் சமோடி பிரபோதா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சுகந்தி குமாரி, சமாரி அத்தப்பத்து மற்றும் கவிஷா தில்ஹாரி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

தொடரை வென்ற இலங்கை அணி!

176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி 17.2 ஓவர்களில் இலக்கை எட்டி பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது.

அந்த அணியில் சஞ்சனா கவிந்தி அதிகபட்சமாக 24 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேப்டன் சமாரி அத்தப்பத்து அதிரடியாக 15 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். ஹர்ஷிதா சமரவிக்கிரம 37 ரன்கள், விஷ்மி குணரத்னே 31 ரன்கள் எடுத்தனர்.

பாகிஸ்தான் தரப்பில் உம்-இ-ஹனி இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். வஹீதா அக்தர் மற்றும் ஆயிஷா ஸாபர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டி20 போட்டி நாளை மறுநாள் (ஆகஸ்ட் 4) நடைபெறுகிறது.

Summary

The Sri Lanka women's team won the second T20 match against Pakistan by 6 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.