ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கால்பந்து - கிரிக்கெட்: ஜூட் பெல்லிங்கமைச் சந்தித்த ஃபாத்திமா சனா, உஸ்மான் தாரிக்!

இங்கிலாந்து கால்பந்து வீரரைச் சந்தித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர், வீராங்கனை குறித்து...

Jude Bellingham meets Pakistan cricketers Usman Tariq and Fatima Sana.

ஜூட் பெல்லிங்கமைச் சந்தித்த ஃபாத்திமா சனா, உஸ்மான் தாரிக். - படங்கள்: இன்ஸ்டா / பர்மிங்காம் ஃபீனிக்ஸ்.

Published On :2 ஆகஸ்ட் 2026, 1:13 pm IST

இங்கிலாந்து கால்பந்து வீரர் ஜூட் பெல்லிங்கமைச் சந்தித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உஸ்மான் தாரிக், வீராங்கனை ஃபாத்திமா சனா சந்தித்தார்கள். இந்த விடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

இங்கிலாந்தில் தி ஹன்ட்ரட் கிரிக்கெட் லீக் நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் ஜூட் பெல்லிங்கம் வந்து கிரிக்கெட் விளையாடினார்.

தி ஹன்ட்ரட் கிரிக்கெட் லீக் இந்த சீசன் போட்டிகள் ஜூலை 21 முதல் ஆக.16ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. நேற்றிரவு பர்மிங்காம் ஃபீனிக்ஸ் - வெல்ஷ் ஃபயர் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் வெல்ஷ் ஃபயர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. ஜோ ரூட் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

இந்தப் போட்டியைக் காண ஜூட் பெல்லிங்கம் வந்திருந்தார். அங்கு பாகிஸ்தான் வீரர் உஸ்மான் தாரிக், வீராங்கனை ஃபாத்திமா சனா சந்தித்தார். கிரிக்கெட்டும் விளையாடிய காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

கால்பந்து உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணி மூன்றாமிடம் பிடித்து அசத்தியது. ஜூட் பெல்லிங்கம் சிறப்பாக விளையாடி சாதனை படைத்தார். தற்போது, தனது தற்காலிக ஓய்வை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார்.

பர்மிங்காம் ஃபீனிக்ஸ் அணியில் ஆடவர் அணியில் உஸ்மான் தாரிக்கும் மகளிர் அணியில் ஃபாத்திமா சனாவும் விளையாடி வருகிறார்கள்.

இந்தத் தொடரில் ஆடவர் பர்மிங்காம் ஃபீனிக்ஸ் அணி தொடர்ச்சியாக தனது மூன்றாவது தோல்வியைச் சந்தித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Summary

Jude Bellingham meets Pakistan cricketers Usman Tariq and Fatima Sana in The Hundred

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.