நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக தோல்விகளைச் சந்தித்து வரும் மும்பை குறித்து அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா “சில கடினமான முடிவுகளை எடுத்தாக வேண்டும்” எனத் தெரிவித்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது.
மும்பை அணிக்கு இது நான்காவது தோல்வியாக அமைந்த நிலையில் இரண்டு புள்ளிகளை மட்டுமே பெற்று புள்ளிப் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.
இதுகுறித்து அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா கூறியதாவது:
வெளிப்படையாகச் சொல்லவேண்டுமானால், இப்போது பெரிதாகச் சொல்ல என்னிடம் ஒன்றுமில்லை. நாங்கள் மீண்டும் தொடக்கத்துக்கே சென்று எங்கே தவறு செய்கிறோம் என்பதைக் கவனிக்க வேண்டும். இந்தத் தவறு தனிநபர்களுடையதா? அணியின் தவறா? அல்லது திட்டத்தில் தவறா? என்பதைத் தெரிந்துகொண்டு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
மேலும், நாங்கள் சில கடினமான முடிவுகளை எடுத்தாக வேண்டுமா அல்லது இந்த நிலைமை மாறும் என்று நம்பிக்கொண்டு களத்தில் தொடர்ந்து ஆட வேண்டுமா என்பதைப் பார்க்க வேண்டும். இதற்கான பொறுப்பையும் நாம் ஏற்க வேண்டும்.
எதிரணியான பஞ்சாப் அணியை நிச்சயம் பாராட்ட வேண்டும். பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆனது. இரண்டாம் இன்னிங்ஸின்போது, பனிப்பொழிவு ஏற்பட்டதால் அவர்களுக்கு பேட்டிங் எளிதானது. இருந்தாலும் அவர்கள் எங்களை விட சிறப்பாக விளையாடினார்கள். பஞ்சாப் அணியின் பந்துவீச்சு, பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்துமே சிறப்பாக இருந்தது எனத் தெரிவித்தார்.
Summary
Regarding Mumbai, which has been facing a series of defeats in the ongoing IPL season, team captain Hardik Pandya stated, "Some tough decisions must be made."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்; பிளேயிங் லெவனில் இரண்டு அறிமுக வீரர்கள்!

டிம் டேவிட், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!

நாளை என்பது வரும், சூரியன் உதிக்கும்..! தோல்விக்குப் பின் ஹார்திக் பாண்டியா நம்பிக்கை!

ஹார்திக் பாண்டியா இல்லை: தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



