சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் பிளேயிங் லெவனில் விளையாடாத தில்லி கேபிடல்ஸ் வீரர் நிதீஷ் ராணாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நான்காவது நடுவருடன் களத்துக்கு வெளியே கடுமையான விவாதத்தில் ஈடுபட்டதால் இந்த அபாரதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது
நேற்றிரவு சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 212/2 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய தில்லி அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தப் போட்டியில் 19ஆவது ஓவரின் பாதியில் ஸ்டப்ஸுக்கு புதிய கையுறைகள் (க்ளவ்ஸ்) வேண்டுமென கோரினார். போட்டிக்கு இடையில் இப்படி மாற்ற முடியாது என களத்துக்கு வெளியே இருந்த நான்காவது நடுவர் தடுத்து நிறுத்தினார்.
இதற்கேற்றார்போல ஸ்டப்ஸ் ஓவர்டன் வீசிய பந்தில் ஆட்டமிழப்பார். இதனால், விரக்தியடைந்த நிதீஷ் ராணா நான்காவது நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்தக் காரணத்தினால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அபாராதம் மட்டுமில்லாமல் ஒரு தகுதி இழப்புப் புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து ஐபிஎல் நிர்வாகம் அளித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தில்லி பேட்டர் நிதீஷ் ராணாவுக்கு ஐபிஎல் நடத்தை விதிமுறைகள் லெவல் 1 மீறியதால், போட்டிக்கான ஊதியத்தில் இருந்து 25 சதவிகிதம் அபாரதம் விதிக்கப்படுகிறது. மேலும், அவருக்கு ஒரு தகுதி இழப்புப் புள்ளியும் வழங்கப்படுகிறது எனக் கூறப்பட்டுள்ளது.
தில்லி அணியின் பயிற்சியாளரும் நடுவருடன் இது குறித்து வாதிடுவார். ஆனால், நிதீஷ் ராணா எல்லை மீறிச் சென்றதால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Summary
Rana fined 25% match fee for arguing with umpire what is the reason.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கே.எல்.ராகுல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அசத்தல்; தில்லி கேபிடல்ஸுக்கு 3-வது வெற்றி!

தோல்விக்குக் காரணம் இதுதான்... மனம் திறந்த தில்லி கேப்டன்!

சிஎஸ்கே பேட்டிங்; பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள்!

ஹார்திக் பாண்டியா இல்லை: தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


