சிஎஸ்கே வீரர் சஞ்சு சாம்சன் கேரளத்தில் ரசிகர் ஒருவருக்கு புதிய மொபைல் போனை பரிசாக வழங்கி ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
கேரளத்தில் 140 தொகுதிகளுக்கும் பலத்த பாதுகாப்புடன் வாக்குப் பதிவு நடைபெற்றது. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் பாஜக என மும்முனைப் போட்டி நிலவுகிறது.
டி20 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருது பெற்ற சஞ்சு சாம்சன் தற்போது ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சிஎஸ்கே அணிக்கு இடம் மாறியுள்ள சாம்சன் இதுவரை சுமாரான விளையாட்டையே விளையாடி வருகிறார்.
கேரளத்தில் வாக்களிக்கச் சென்ற சஞ்சு சாம்சனிடம் புகைப்படம் எடுத்த ரசிகரது மொபைல் உடைந்திருப்பதைக் கண்டு, அவருக்கு தன்னிடம் இருந்த ரூ.30,000 மதிப்பிலான புதிய மொபைல் போனை பரிசளித்துள்ளார். இது குறித்து அந்த நபர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டதாவது:
சஞ்சு சாம்சன் - தங்க மனசுக்காரன்
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க சஞ்சு சாம்சன் கேரளத்திற்கு வந்திருக்கிறார். அவரது ரசிகர் ஒருவர் அவரிடம் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். அப்போது ரசிகரின் போனில் டிஸ்பிளே உடைந்திருப்பதைக் கண்ட சஞ்சு சாம்சன் விசாரித்துள்ளார்.
போனை அப்டேட் செய்யும்போது இப்படி ஆகிவிட்டதெனக் கூறியுள்ளார். தனது காரில் வைத்திருந்த புதிய மொபைல் போனை ரசிகருக்கு பரிசாக அளித்துள்ளார் எனக் கூறியுள்ளார்.
Summary
Sanju Samson A Heart of Gold, gifts a new mobile phone to a fan.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரோஹித் சர்மா, விராட் கோலி வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

அதிரடி சதமடித்து சல்யூட்..! பயிற்சியாளருக்குச் சமர்ப்பித்த சஞ்சு சாம்சன்!

சஞ்சு சாம்சன் பேட்டிங் குறித்து கவலையில்லை: சிஎஸ்கே பயிற்சியாளர்

7 ஆண்டுகளில் முதல் முறை! முதல் போட்டியில் அரை சதம் விளாசத் தவறிய சஞ்சு சாம்சன்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


