லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தடுமாறும் மும்பை: ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய முகேஷ் குமார்!

மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக அசத்திய முகேஷ் குமார் குறித்து...

News image

திலக் வர்மா விக்கெட் வீழ்த்திய முகேஷ் குமார். - படம்: ஐபிஎல்

Updated On :4 ஏப்ரல் 2026, 10:28 am

மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக தில்லி கேபிடல்ஸ் அணியின் பந்துவீச்சாளர் முகேஷ் குமார் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அருண் ஜேட்லி திடலில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தில்லி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. அணியில் மாற்றமின்றி விளையாடி வருகிறது.

முதல் 2 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 18 ரன்களுக்கு விக்கெட் விழாமல் இருந்தது. மூன்றாவது ஓவரை முகேஷ் குமார் வீசினார்.

இந்த ஓவரில் மூன்றாவது மற்றும் ஐந்தாவது பந்தில் விக்கெட் விழுந்தது. இந்த ஓவரில் 0, 0, விக்கெட், 0, விக்கெட், 4 என சிறப்பாக பந்துவீசினார்.

ரியான் ரிக்கல்டன், திலக் வர்மா ஆகியோரின் விக்கெட்டை தில்லி வீரர் முகேஷ் குமார் வீழ்த்தினார். தற்போது, மும்பை அணி 5 ஓவர்களில் 32/2 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் - சூர்யகுமார் விளையாடி வருகிறார்கள்.

Summary

Mumbai Stumbles: Mukesh Kumar Claims Two Wickets in a Single Over!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.