முதல் ஒருநாள் ஆட்டம்: இந்தியாவிடம் போராடி வீழ்ந்த தென்னாப்பிரிக்கா!
முதல் ஒருநாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா!
முதல் ஒருநாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா!
By இணையதளச் செய்திப் பிரிவு
Sundar S A
இந்தியா - தென்னாப்பிரிக்கா ஆடவர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. ராஞ்சியில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 349 ரன்களைக் குவித்து அசத்தியது. நட்சத்திர வீரர் விராட் கோலி சதம் கடந்து சாதனை படைத்தார். ரோஹித் சர்மாவும் கே. எல். ராகுலும் அரைசதம் கடந்தனர்.
அடுத்து கடின இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்காவுக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. 11 ரன்களில் அந்த அணியின் 3 முக்கிய விக்கெட்டுகள் வீழ்ந்தன. இதனால் இந்தியா எளிதில் வெற்றி பெறும் என்ற நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், 4-ஆவது வீரராகக் களமிறங்கிய மேத்யூ ப்ரீட்ஸ் 72 ரன்கள் எடுத்து அணியைச் சரிவிலிருந்து மீட்டார். அவருக்குப் பக்கபலமாக டோனி டி ஸார்ஸி 39 ரன்களும் டெவால்ட் ப்ரெவிஸ் 37 ரன்களும் எடுத்தனர்.
இன்னொருபுறம் 7-ஆவது வீரராக களமிறங்கிய மார்கோ ஜென்சென் இந்திய பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தார். 39 பந்துகளில் அவர் 3 சிக்ஸர்கள், 8 பௌண்டரிகளுடன் 70 ரன் எடுக்க ஆட்டம் தென்னாப்பிரிக்கா பக்கம் சென்றது. அவருக்கு பக்கபலமாக கார்பின் போஸ்ச் 67 ரன்கள் திரட்டி அசத்தினார்.
கடைசி கட்டத்தில் டெய்லண்டர்களான ப்ரேனெலன் சுப்ராயெனும் நேண்ட்ரே பர்கரும் தலா 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் அந்த அணி 49.2 ஓவர்களில் 332 ரன்களுக்கு ஆழ்ட்டமிழந்தது. இதன்மூலம், இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
India vs South Africa, 1st ODI - India won by 17 runs
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது