மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணியின் கேப்டனாக பொல்லார்டு நியமனம்!
மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணியின் கேப்டனாக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் கிரண் பொல்லார்டு நியமிக்கப்பட்டுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணியின் கேப்டனாக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் கிரண் பொல்லார்டு நியமிக்கப்பட்டுள்ளார்.
By இணையதளச் செய்திப் பிரிவு
Tamilvendhan
மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணியின் கேப்டனாக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் கிரண் பொல்லார்டு நியமிக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச லீக் டி20 தொடரின் அடுத்த சீசன் வருகிற டிசம்பர் 2 ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 6 அணிகள் பங்கேற்று விளையாடும் இந்த தொடர் இன்னும் சில நாள்களில் தொடங்கவுள்ளதால், அனைத்து அணிகளும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணியின் கேப்டனாக முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கிரண் பொல்லார்டு நியமிக்கப்பட்டுள்ளார். நிக்கோலஸ் பூரனிடமிருந்து கேப்டன் பொறுப்பு தற்போது பொல்லார்டிடம் வழங்கப்பட்டுள்ளது.
38 வயதாகும் பொல்லார்டு இதுவரை 720 டி20 போட்டிகளில் விளையாடி, அதிக டி20 போட்டிகளில் விளையாடியுள்ள வீரர் என்ற பெருமையை தன்வசம் வைத்துள்ளார். கிறிஸ் கெயிலுக்கு அடுத்தபடியாக டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையும் இவரையேச் சேரும். டி20 போட்டிகளில் கிறிஸ் கெயில் 14,562 ரன்கள் எடுத்துள்ள நிலையில், பொல்லார்டு 14,237 ரன்கள் எடுத்துள்ளார்.
டி20 போட்டிகளில் இதுவரை பொல்லார்டு 333 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அவர் 8 முறை 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
சர்வதேச லீக் டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி வருகிற டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெறும் அதன் முதல் போட்டியில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.
Former West Indies player Kiran Pollard has been appointed as the captain of the Mumbai Indians Emirates team.
இதையும் படிக்க: சுழற்பந்துவீச்சில் இந்திய அணி தடுமாறுவதற்கு என்னிடம் பதில் இல்லை: கே.எல்.ராகுல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது