டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

இங்கிலாந்து அணியின் கேப்டனாக விரும்புகிறாரா பென் டக்கெட்?

இங்கிலாந்து அணியின் கேப்டனாக செயல்பட அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் விரும்புகிறாரா என்பது குறித்து...

News image
பென் டக்கெட் (கோப்புப் படம்)- படம் | AP
Updated On :25 மார்ச் 2025, 3:47 pm

DIN

இங்கிலாந்து அணியின் கேப்டனாக செயல்படுவது குறித்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் பேசியுள்ளார்.

இங்கிலாந்து அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஜோஸ் பட்லர் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து இங்கிலாந்து அணி வெளியேறியதற்கு பிறகு, அவரது கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். ஜோஸ் பட்லர் கேப்டன் பதவியிலிருந்து விலகியதால் இங்கிலாந்து அணியின் வெள்ளைப் பந்து போட்டிகளுக்கான அடுத்த கேப்டனுக்கான தேடலை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தொடங்கியுள்ளது.

கேப்டனாக விரும்பும் பென் டக்கெட்

இங்கிலாந்து அணியின் வெள்ளைப் பந்து போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பு காலியாக இருக்கும் நிலையில், இங்கிலாந்து அணியை கேப்டனாக வழிநடத்துவது கண்டிப்பாக எனது கனவாக இருக்கும் என அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இங்கிலாந்து அணியை கேப்டனாக வழிநடத்துவது கண்டிப்பாக எனது கனவாக இருக்கும். இங்கிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பினை இலக்காக கொண்டு செயல்படுவதாக நினைக்கவில்லை. ஆனால், கேப்டன் பொறுப்புக்கான கேள்விக்கு எதற்காக பதிலளிக்கிறேன் எனத் தெரியவில்லை. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் என்ன செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். தற்போது, இங்கிலாந்து அணிக்காக ஒரு வீரராக அணியில் விளையாடுவதே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

4 ஆண்டுகளுக்கு முன்னால் இங்கிலாந்து அணிக்காக விளையாடுவேன் என நினைத்திருக்க மாட்டேன். ஆனால், இன்று இங்கிலாந்து அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கிறேன். எனது நாட்டுக்காக மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.

அண்மையில் நிறைவடைந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்காக பென் டக்கெட் சிறப்பாக விளையாடினார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 227 ரன்கள் குவித்து மூன்றாவது இடத்தையும் அவர் பிடித்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பென் டக்கெட் 165 ரன்கள் எடுத்ததே சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் வரலாற்றில் எடுக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.