4 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!வேலூரில் விஜய் நிா்வாகிகள் சந்திப்பு கூட்டம்: 4,900 போ் பங்கேற்பு!டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

நியூஸி. சுழலில் இந்தியா திணறல்!

பரபரப்பான கட்டத்தில் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி...

News image
- @BLACKCAPS
Updated On :9 மார்ச் 2025, 3:06 pm

DIN

துபை : சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து அணி இந்திய பேட்ஸ்மென்களை ரன் எடுக்க விடாமல் கட்டுப்படுத்தியுள்ளது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

நியூஸிலாந்து நிர்ணயித்த 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த நிலையில், விக்கெட் இழப்பின்றி 20 ஓவர்களுக்குள் 105 ரன்களைக் குவித்த இந்திய அணிக்கு அதன்பின் சோதனை காத்திருந்தது.

ஷுப்மன் கில், விராட் கோலி அடுத்தடுத்த பந்துகளில் நடையைக் கட்ட இந்தியாவின் ரன் ரேட் சரிந்தது. இந்த நிலையில், கேப்டன் ரோஹித் சர்மாவும் 76 ரன்களில் ஆட்டமிழந்துள்ளார்.

இப்போது இந்திய அணி 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

சிறப்பான தொடக்கம் அளித்த ஷுப்மன் கில்லை நியூஸிலாந்து கேப்டன் சாண்ட்நெர் தமது சுழற் பந்துவீச்சில் சிக்க வைத்து ஆட்டமிழக்கச் செய்தார். அவருக்குப்பின் களம் கண்ட விராட் கோலி, மிக்கேல் பிராஸ்வெல் வீசிய முதல் பந்திலேயே எல்.பி.டபில்யூ முறையில் டக்-அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். அவர் எடுத்த ரிவீயூ வீணானது.

இந்த நிலையில், ஆட்டம் மந்தமாகவே, ரச்சின் ரவீந்திரா வீசிய பந்தை ரோஹித் சர்மா கிரீஸை விட்டு இறங்கிவந்து அடிக்க முற்பட, விக்கெட்கீப்பர் லாதம் அவரை அவுட் செய்து வெளியேற்றினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.