எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

கோலி, ரோஹித்தை குறிவைப்பது நியாயமில்லை..! பாக். முன்னாள் வீரர் ஆதங்கம்!

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் கோலி, ரோஹித்துக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.

News image
ரோஹித் சர்மா - விராட் கோலி (கோப்புப் படம்)
Updated On :25 ஜனவரி 2025, 7:18 am

DIN

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் கோலி, ரோஹித்துக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். உள்ளூர் போட்டிகளில் அவர்களை கட்டாயப்படுத்தி ஆடவைப்பது சரியல்ல என்றும் பேசியுள்ளார்.

இந்திய அணி டெஸ்ட்டில் நியூசிலாந்துடன் 0-3 எனவும் ஆஸி. உடன் பிஜிடி தொடரை 1-3 எனவும் இழந்தது. இதனால் இந்திய கிரிக்கெட் அணி மீது பிசிசிஐ கடும் அதிருப்தி அடைந்தது.

இந்தத் தோல்விகளை முன்னிட்டு பிசிசிஐ இந்திய வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக மூத்த வீரர்களும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டுமென உத்தரவிட்டது.

கோலி காயத்தினால் பங்கேற்கவில்லை எனக் கூறப்பட்டது. பின்னர், ஜன.30இல் களந்துகொள்வாரென எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ரோஹித் மும்பை அணியில் ரஞ்சி டிராபி தொடரில் விளையாடி வருகிறார்.

இந்த நிலையில் பாகி. முன்னாள் விக்கெட் கீப்பர் - பேட்டர் ரஷித் லதீப் கூறியதாவது:

சர்வதேச போட்டிகளில் விளையாடுவதால் உள்ளூர் போட்டிகளில் விளையாட வீரர்களுக்கு நேரமில்லை. தேவைப்பட்டால் விளையாடலாம். ஆனால், ரோஹித், கோலியை குறிவைத்து கட்டாயப்படுத்தி விளையாட வைக்கிறார்கள். கடந்த காலங்களில் சச்சினும் அவ்வளவாக உள்ளூர் போட்டிகளில் விளையாடவில்லை.

ரோஹித், கோலி டி20 உலகக் கோப்பையை வென்றிருக்கிறார்கள். ஒருநாள் உலகக் கோப்பையில் இறுதிப் போட்டிக்கு வரை சென்றுள்ளார்கள். இதெல்லாம் உள்ளூர் போட்டிகள் விளையாடமல்தானே சென்றார்கள்.

அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி வரவிருக்கிறது. இங்கிலாந்துடன் ஒருநாள் தொடரும் உள்ளது. அவர்கள் அதற்காக தயாராக வேண்டும். இது வெள்ளைப் பந்து கிரிக்கெட். முற்றிலும் வேறாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.