ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

அதிவேக 11,000* ரன்கள்..! சச்சின் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா!

சச்சின் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா..

News image
ரோஹித் சர்மா..
Updated On :20 பிப்ரவரி 2025, 1:56 pm

DIN

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து இந்திய கேப்டன் ரோஹித் சர்மா புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

9-வது சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் நடைபெறுகிறது.

இந்தியா - வங்கதேசம் மோதும் போட்டி துபையில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 228 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

அதன்பின்னர் 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் பந்துவீச்சில் பவுண்டரி விளாசி 12* ரன்கள் எடுத்தபோது ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 11,000* ரன்களை எட்டிய இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்தார்.

ரோஹித் சர்மா தனது 261-வது இன்னிங்ஸில் 11,000 ரன்களை எட்டியுள்ளார். இதற்கு முன்னதாக, விராட் கோலி 222 இன்னிங்ஸில் இந்த மைல்கல்லை எட்டி முதலிடத்தில் நீடிக்கிறார். அதேவேளையில் சச்சின் டெண்டுல்கர் தனது 276-வது இன்னிங்ஸில் இந்த மைல்கல்லை எட்டியிருந்தார்.

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 11,000 ரன்கள் எடுத்தவர்

விராட் கோலி (இந்தியா) – 222 இன்னிங்ஸ்

ரோஹித் சர்மா (இந்தியா) - 261 இன்னிங்ஸ்

சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) – 276 இன்னிங்ஸ்

ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) – 286 இன்னிங்ஸ்

சௌரவ் கங்குலி (இந்தியா) – 288 இன்னிங்ஸ்

ஜாக் காலிஸ் (தென்னாப்பிரிக்கா) – 293 இன்னிங்ஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.