ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!
மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட்டில் சதம் அடித்த டிராவிஸ் ஹெட் குறித்து...
மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட்டில் சதம் அடித்த டிராவிஸ் ஹெட் குறித்து...
By இணையதளச் செய்திப் பிரிவு
Dineshkumar
ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி 2025-26: மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் சதம் அடித்து அசத்தினார்.
தனது பாணியில் பவுண்டரி அடித்து அசத்திய டிராவிஸ் ஹெட் ஒரே திடலில் தொடர்ச்சியாக 4 முறை சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
அடிலெய்டில் கடந்த புதன்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா, முதல் இன்னிங்ஸில் 371 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து தனது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து, 2-ஆம் நாளான வியாழக்கிழமை முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்திருந்தது.
கேப்டன் பென் ஸ்டோக்ஸ், பௌலா் ஜோஃப்ரா ஆா்ச்சா் ஆகியோா், இங்கிலாந்தின் இன்னிங்ஸை 3-ஆவது நாளான வெள்ளிக்கிழமை தொடா்ந்தனா். ஆஸ்திரேலிய பௌலா்களுக்கு சவால் அளித்த இந்தக் கூட்டணி, 9-ஆவது விக்கெட்டுக்கு 106 ரன்கள் சோ்த்தது.
இதில் சதத்தை நோக்கி முன்னேறிய ஸ்டோக்ஸ், 8 பவுண்டரிகளுடன் 83 ரன்களுக்கு சாய்க்கப்பட்டாா். அரை சதம் கடந்த ஆா்ச்சரும், 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 51 ரன்களுக்கு அடுத்த சில ஓவா்களிலேயே ஆட்டமிழந்தாா்.
இதனால் இங்கிலாந்து இன்னிங்ஸ் 87.2 ஓவா்களில் 286 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது. ஜோஷ் டங் 7 ரன்களுடன் கடைசி வீரராக நின்றாா். ஆஸ்திரேலிய பௌலா்களில் பேட் கம்மின்ஸ், ஸ்காட் போலண்ட் ஆகியோா் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினா். நேதன் லயன் 2, மிட்செல் ஸ்டாா்க், கேமரூன் கிரீன் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.
இதையடுத்து, முதல் இன்னிங்ஸில் 85 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கியது. அதன் பேட்டா்களில் ஜேக் வெதரால்டு 1, மாா்னஸ் லபுஷேன் 1 பவுண்டரியுடன் 13 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா்.
மறுபுறம் நிலையாக விளையாடி ரன்கள் சோ்த்து வந்த டிராவிஸ் ஹெட்டுடன், உஸ்மான் கவாஜா இணைந்தாா். இவா்கள் ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 86 ரன்கள் சோ்த்தது. அரை சதத்தை நோக்கி நகா்ந்த கவாஜா 4 பவுண்டரிகளுடன் 40 ரன்களுக்கு சாய்க்கப்பட்டாா்.
தொடா்ந்து வந்த கேமரூன் கிரீன் 1 பவுண்டரியுடன் 7 ரன்களுக்கு வெளியேற, அலெக்ஸ் கேரி ஹெட்டுடன் கூட்டணி அமைத்தாா். ஆஸ்திரேலியாவின் ஸ்கோரை பலப்படுத்திய இந்த பாா்ட்னா்ஷிப்பில், ஹெட் தனது 11-ஆவது டெஸ்ட் சதத்தை பூா்த்தி செய்தாா். கேரி அரை சதம் கடந்தாா்.
இவ்வாறாக வெள்ளிக்கிழமை ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 66 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 271 ரன்கள் சோ்த்து, 356 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஹெட் 142, கேரி 52 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா்.
இங்கிலாந்து தரப்பில் ஜோஷ் டங் 2, பிரைடன் காா்ஸ், வில் ஜாக்ஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
தொடர்ச்சியாக ஒரே திடலில் சதம் அடித்தவர்கள்
டான் பிராட்மேன் - எம்சிஜி - 1928-31- 4 முறை
டான் பிராட்மேன் - ஹெடிங்லே - 1930- 48 - 4 முறை
மைக்கேல் கிளார்க் - அடிலெய்டு - 2012- 14 - 4 முறை
ஸ்டீவ் ஸ்மித் - எம்சிஜி - 2014-17 - 4 முறை
டிராவிஸ் ஹெட் அடிலெய்டு - 2022-25 - 4 முறை
In the third Ashes Test, Australian opener Travis Head impressed by scoring a century.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது