அடிலெய்ட் டெஸ்ட்: அலெக்ஸ் கேரி சதம்; கவாஜா அரைசதம்! ஆஸி. வலுவான தொடக்கம்!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வலுவான தொடக்கம் அளித்துள்ளதைப் பற்றி...
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வலுவான தொடக்கம் அளித்துள்ளதைப் பற்றி...
By இணையதளச் செய்திப் பிரிவு
Muthuraja Ramanathan
ஆஷஸ் டெஸ்ட் 2025 - 2026 : ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வலுவான தொடக்கம் அளித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ஆஷஸ்’ தொடரில் விளையாடி வருகிறது.
இதுவரை 2 போட்டிகள் நிறைவடைந்த நிலையில், முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்ற ஆஸ்திரேலிய அணி, மூன்றாவது போட்டி அடிலெய்ட் கிரிக்கெட் திடலில் இன்று காலை தொடங்கியது.
மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரைத் தக்கவைக்கும் முன்னப்பில் டாஸ் வென்ற கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
முதலிரண்டு போட்டிகளில் பொறுப்பு கேப்டனாக விளையாடிய ஸ்டீவ் ஸ்மித், உடல்நலக் குறைவால் கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகினார். இதனால், அவருக்குப் பதிலாக மூத்த வீரர் உஸ்மான் கவாஜா சேர்க்கப்பட்டார்.
ஆஸ்திரேலிய வீரர்கள் நிதானமாக துவங்கினாலும், அவர்களால் சிறப்பான தொடக்கத்தைக் கொடுக்க இயலவில்லை. அதிரடி ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் 10 ரன்களில் பிரைடன் கார்ஸிடமும், ஜேக் வெதரால்டு 18 ரன்கள் மற்றும் மார்னஸ் லாபுசேன் 19 ரன்களில் இருவரும் ஜோப்ரா ஆர்ச்சரிடம் சிக்கினர்.
அவர்களைத் தொடர்ந்து களம்புகுந்த ஐபிஎல்லின் மினி ஏல நாயகன் கேமரூன் கிரீன், 2 பந்துகளை எதிர்கொண்டு ஜோப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சில் பிரைடன் கார்ஸிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட்டாகி வெளியேறினார். நிதானமாக விளையாடிய உஸ்மான் கவாஜா அரைசதம் கடந்து அசத்தினார்.
அவரைத் தொடர்ந்து வந்த விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி நிதான ஆட்டத்தைக் கடைப்பிடித்தார். வாழ்வா? சாவா? என தனது இடத்துக்காகப் போராடிக் கொண்டிருந்த உஸ்மான் கவாஜா சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 82 ரன்கள் எடுத்து வில் ஜாக்ஸ் பந்துவீச்சில் வெளியேறினார். கவாஜா - கேரி இருவரும் சேர்ந்து 5 விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்தனர்.
அவருக்குப் பின்னர் வந்த ஜோஸ் இங்லிஸ் 32 ரன்களும், கேப்டன் பாட் கம்மின்ஸ் 13 ரன்களிலும் வெளியேற நிதான ஆட்டத்தைக் கடைப்பிடித்த அலெக்ஸ் கேரி 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 106 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 83 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 326 ரன்கள் எடுத்துள்ளது.
மிட்செல் ஸ்டார்க் 33 ரன்களிலும் நாதன் லயன் ரன் ஏதுமின்றியும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து அணித் தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளும், கார்ஸ், வில் ஜாக்ஸ் தலா 2 விக்கெட்டுகளும், ஜோஷ் டங் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
நேற்று ஹீரோ; இன்று ஜீரோ! அடிலெய்ட் டெஸ்ட்டில் டக் அவுட்டான கேமரூன் கிரீன்!
Alex Carey posted a hundred and Usman Khawaja scored 82 to help Australia reach 326 for eight at stumps on a hot opening day of the third Ashes test.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது