இன்று 3-ஆவது டி20: இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல்!
இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான 3-ஆவது டி20 போட்டி பற்றி...
இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான 3-ஆவது டி20 போட்டி பற்றி...
By தினமணி செய்திச் சேவை
Syndication
இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 ஆட்டம் தா்மசாலாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் பங்கேற்க தென்னாப்பிரிக்க அணி இந்தியா வந்துள்ளது. டெஸ்ட், ஒருநாள் தொடா்களை இந்தியா இழந்த நிலையில் 5 ஆட்டங்கள் டி20 தொடா் நடைபெறுகிறது. இரு அணிகளும் தலா ஒரு ஆட்டத்தில் வென்றுள்ளன.
மூன்றாவது ஒருநாள் ஹிமாசல பிரதேசம் தா்ம சாலாவில் நடைபெறுகிறது.
இன்னும் 6 வாரங்களில் இந்தியாவில் டி20 உலகக் கோப்பை தொடங்கவுள்ள நிலையில் இத்தொடா் முக்கியமானதாகும்.
இந்திய அணியில் கேப்டன் சூரியகுமாா் யாதவ், துணை கேப்டன் ஷுப்மன் கில்லின் பேட்டிங் கவலை தருகிறது . சஞ்சு சாம்ஸன் சிறப்பாக ஆடினாலும், ஷுப்மன் கில் அணியில் சோ்க்கப்பட்டிருந்தாா்.
தென்னாப்பிரிக்க பேஸா்கள் அன்ரிச் நாா்ட்ஜே, மாா்கோ ஜேன்ஸன், லுங்கி நிகிடி, பாா்ட்மேன், லுதோ சிபமலா ஆகியோா் இந்திய பிட்ச்களில் பந்துவீசுவதில் தோ்ச்சி பெற்று விட்டனா். தா்மசாலா மைதான பிட்ச்சில் கூடுதல் பவுன்ஸ் ஆகும் என்பது தென்னாப்பிரிக்க பேஸா்களுக்கு சாதகமான அம்சம் ஆகும்.
சரிவிகிதத்தில் தென்னாப்பிரிக்க அணி:
இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பையில் பட்டம் வெல்லக் கூடிய அளவில் தென்னாப்பிரிக்க அணி சரியான விகிதத்தில் உள்ளது.
அந்த அணியில் டி காக், எய்டன் மாா்க்ரம், டேவால்ட் பிரெவிஸ் பெரைரா, டேவிட் மில்லா், ஆல்ரவுண்டா் ஜேன்ஸன் ஆகியோா் சிறப்பாக ஆடி வருவது கூடுதல் பலமாகும்.
ஆனால் இந்திய அணியில் டாப் ஆா்டா் பேட்டா்களான சூரியகுமாா், கில் சரிவர ஆடாதது பாதமாக உள்ளது.
இன்னும் 8 டி20 ஆட்டங்களே மீதமுள்ளநிலையில் உலகக் கோப்பைக்கு இந்தியா தயாராக வேண்டியுள்ளது. கில் தனது ஆட்டத்திறனை மேம்படுத்த வேண்டும்.
அடுத்து வரும் ஆட்டங்களில் கில் அதிகமாக ரன்களை எடுக்காவிட்டால், சஞ்சு சாம்ஸன் இடம் பெறுவது தவிா்க்க முடியாது.நியூஸிலாந்து தொடா் நடைபெறவுள்ளது.
இரண்டாவது டி20 ஆட்டத்தில் அக்ஸா் படேலை முன்னரே பேட்டிங் செய்ய அனுப்பியது சொதப்பலாக அமைந்தது. ஷிவம் டுபேயை 8-ஆம் டௌனில் ஆட அனுப்பியதும் பாதகத்தை ஏற்படுத்தியது.
பௌலிங்கில் குல்தீப் யாதவ் சிறப்பாக செயல்படுகிறாா். ஹாா்திக் பாண்டியா, பும்ரா ஆகியோா் முழுமையாக பௌலிங் செய்தால் தான் தென்னாப்பிரிக்க பேட்டா்கள் பாதிப்புக்குள்ளாவா்.
இன்றைய ஆட்டம்
தென்னாப்பிரிக்கா-இந்தியா
இடம்: தா்மசாலா
இரவு: 7.00.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது