நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ஆஸி. தொடர் நிறைவடைந்து இவர் சிறந்த வீரராக தாயகம் திரும்புவார்: ரவி சாஸ்திரி

பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நிறைவடைந்து இந்தியாவுக்கு திரும்புகையில் இவர் சிறந்த பேட்ஸ்மேனாக திரும்புவார் என இளம் வீரருக்கு பாராட்டு.

News image
ரவி சாஸ்திரி- கோப்புப் படம்
Updated On :19 நவம்பர் 2024, 8:22 am

DIN

பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நிறைவடைந்து இந்தியாவுக்கு திரும்புகையில் இவர் சிறந்த பேட்ஸ்மேனாக திரும்புவார் என இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான யஷஸ்வி ஜெய்ஸ்வாலை இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார்.

பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற நவம்பர் 22 ஆம் தேதி பெர்த்தில் தொடங்குகிறது.

கடந்த இரண்டு முறை ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பார்டர் - கவாஸ்கர் தொடரை வென்றது. மூன்றாவது முறையாக தொடர்ச்சியாக தொடரை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி உள்ளது.

உலகத் தரத்திலான வீரர்

முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் உலகத் தரத்திலான வீரர் எனவும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் நிறைவடைந்து இந்தியா திரும்புகையில் அவர் மேலும் சிறப்பான பேட்ஸ்மேனாக மாறியிருப்பார் எனவும் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் (கோப்புப் படம்)

யஷஸ்வி ஜெய்ஸ்வால் (கோப்புப் படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பார்டர் - கவாஸ்கர் தொடர் நிறைவடைந்து தாயகம் திரும்புகையில், ஜெய்ஸ்வால் மேலும் சிறப்பான பேட்ஸ்மேனாக மாறியிருப்பார் என நினைக்கிறேன். அவர் ஏற்கனவே உலகத் தரத்திலான வீரர். அவர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் எப்படி விளையாடினார் என்பதை பார்த்திருப்பீர்கள். எவ்வளவு திறமையான வீரராக இருந்தாலும் பெர்த் ஆடுகளங்களில் சிறப்பாக விளையாடுவது அவ்வளவு எளிதல்ல. அங்கு பௌன்சர்கள் அதிகம் இருக்கும். அதற்கேற்றவாறு வீரர்கள் தங்களது ஷாட் தேர்வுகளை கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும்.

பெர்த் ஆடுகளத்துக்கு ஏற்றவாறு தனது ஆட்டத்தை மாற்றிக் கொண்டால், அந்த ஆடுகளத்தில் சிறப்பாக விளையாடுவதை ஜெய்ஸ்வால் விரும்புவார். பேட்டிங்கில் மட்டுமின்றி ஃபீல்டிங்கிலும் ஜெய்ஸ்வால் ஆர்வமாக இருக்கிறார். அவர் ஸ்லிப் பகுதியில் அருமையாக ஃபீல்டிங் செய்கிறார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.