பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்தின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
- படம் | இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
Updated On :19 ஆகஸ்ட் 2024, 3:58 pm

DIN

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்தின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (ஆகஸ்ட் 21) நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி மான்செஸ்டரில் நடைபெறுகிறது.

இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

காயம் காரணமாக பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஸாக் கிராலி அணியில் இடம்பெறவில்லை. வேகப் பந்துவீச்சாளர் மேத்யூ பாட்ஸ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அணியில் இடம்பிடித்துள்ளார். அவர் கடைசியாக கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இங்கிலாந்து அணிக்காக விளையாடியிருந்தார்.

இலங்கைக்கு எதிரான தொடரில் இங்கிலாந்து அணியை ஆலி போப் வழிநடத்துவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், ஹாரி ப்ரூக் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிரான முதல் போட்டிக்கான இங்கிலாந்து அணி (பிளேயிங் லெவன்)

டான் லாரன்ஸ், பென் டக்கெட், ஆலி போப் (கேப்டன்), ஜோ ரூட், ஹாரி ப்ரூக் (துணைக் கேப்டன்), ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், மேத்யூ பாட்ஸ், மார்க் வுட் மற்றும் சோயப் பஷீர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.