மெளன சாமியார் முதல்வர் விஜய்! இபிஎஸ் கடும் தாக்கு!இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்ற பரணிகாவுக்கு ரூ. 30 லட்சம்: முதல்வர் விஜய் அறிவிப்பு!

ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்ற பரணிகாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவிப்பு...

பரணிகா - முதல்வர் விஜய்.

Updated On :

ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்ற பரணிகா இளங்கோவனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ச. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் விஜய் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், கோல் ஊன்றித் தாண்டும் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள தடகள வீராங்கனை பரணிகா இளங்கோவனுக்கு மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் இவ்வெற்றியைப் பெற்றுள்ள அவரது சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

அவரது வெற்றி, இலக்கை நோக்கி அயராது உழைக்கும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய நம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளிக்கும். பரணிகா இளங்கோவன் அவர்கள் தொடர்ந்து பல உயரங்களை அடைய வாழ்த்துகிறேன்!” எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.