ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நீலத்திலிருந்து ‘காவி’ நிறத்துக்கு மாறிய இந்திய ஹாக்கி ஜெர்ஸி!

காவி நிறத்துக்கு மாறிய இந்திய ஹாக்கி அணியின் ஜெர்ஸியை பற்றி...

இந்திய ஹாக்கி அணி.

Published On :30 ஜூலை 2026, 12:49 pm IST

உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் விளையாடும் இந்திய அணியின் ஜெர்ஸி, நீல நிலத்திலிருந்து காவி நிறத்துக்கு மாற்றப்பட்டிருப்பது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியிருக்கிறது.

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு நடத்தும் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் வருகிற ஆக. 15 முதல் ஆக.30 ஆம் தேதி வரை பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தொடரில் மொத்தமாக 16 அணிகள் ஏ, பி, சி, டி என நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஹாக்கியை தேசிய விளையாட்டாக கொண்ட இந்தியா, வேல்ஸ், இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகியவற்றுடன் 'டி' பிரிவில் இடம்பெற்றுள்ளது.

உலகக் கோப்பை ஹாக்கி தொடருக்கான 20 பேர் கொண்ட இந்திய அணி கடந்த ஜூலை 21 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்திய ஆடவர் மற்றும் பெண்கள் ஹாக்கி அணிகள் தங்களின் பாரம்பரியமிக்க நீல நிற ஜெர்ஸிக்குப் பதிலாக முழுவதுமான காவி நிற ஜெர்ஸி அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இந்த விவகாரத்தில் ஜெர்ஸியின் நிறம் மாற்றப்பட்டது குறித்து இந்திய ஹாக்கி அணித் தரப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அணியின் நீண்டகால அடையாளம் மற்றும் பாரம்பரியத்தைக் கைவிடுவது நல்லதல்ல என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விரேன் ரஸ்கின்ஹா அதிருப்தி தெரிவித்துள்ளார்.

Summary

The Indian men’s and women’s hockey teams will be seen in saffron jerseys instead of their traditional blue kits at next month’s FIH World Cup in the Netherlands and Belgium, a change that has been questioned by former captain Viren Rasquinha.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.