ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

உலகக் கோப்பை ஹாக்கி: இந்திய அணி அறிவிப்பு! இளம் வீரர்களுக்கு வாய்ப்பு!

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு நடத்தும் உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

Published On :21 ஜூலை 2026, 3:51 pm IST

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு நடத்தும் உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு நடத்தும் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் ஆக.30 ஆம் தேதி வரை பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெறவிருக்கிறது. இந்தத் தொடரில் மொத்தமாக 16 அணிகள் ஏ, பி, சி, டி என நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

ஹாக்கியை தேசிய விளையாட்டாகக் கொண்டுள்ள இந்தியா, வேல்ஸ், இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகியவற்றுடன் 'டி' பிரிவில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில், உலகக் கோப்பை ஹாக்கி தொடருக்கான 20 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் இளம் வீரர்கள் பலருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியை ஹர்மன்ப்ரீத் சிங் வழிநடத்துகிறார். இளம் வீரர்கள் ராஜீந்தர் சிங் மற்றும் ஆதித்யா அர்ஜுன் லாலாகே ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

டிஃபென்டர் அமந்தீப் லக்ரா, மிட்பீல்டர்கள் ராஜ் குமார் பால் மற்றும் ரவிச்சந்திர சிங் மொய்ராங்தெம், செல்வம் கார்த்தி ஆகியோர் அணியில் இருந்து ஓரங்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் பரம எதிரியான பாகிஸ்தான் ஆகியவற்றுடன் 'டி' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, தனது அனைத்து ஆட்டங்களையும் நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டெல்வீன் திடலில் விளையாடுகிறது. ஆக. 15 ஆம் தெதி வேல்ஸுக்கு எதிராக விளையாடும் இந்திய அணி, அதைத் தொடர்ந்து ஆக. 17 ஆம் தேதி இங்கிலாந்தையும், ஆக. 19 ஆம் தேதி பாகிஸ்தானையும் எதிர்கொள்கிறது.

இந்திய அணி விவரம்

கோல்கீப்பர்கள்: மோஹித் எச்.எஸ், சூரஜ் கர்கேரா.

டிஃபென்டர்கள்: ஜர்மன்பிரீத் சிங், ஹர்மன்பிரீத் சிங் (கேப்டன்), அமித் ரோஹிதாஸ், ஜுக்ராஜ் சிங், சஞ்சய், சுமித், யஷ்தீப் சிவாச்.

மிட்ஃபீல்டர்கள்: ராஜிந்தர் சிங், ஆதித்யா அர்ஜுன் லலாகே, ஹர்திக் சிங், மன்பிரீத் சிங், நீலகண்ட சர்மா, விவேக் சாகர் பிரசாத்.

முன்கள வீரர்கள்: தில்ப்ரீத் சிங், ஷிலானந்த் லக்ரா, சுக்ஜீத் சிங், மன்தீப் சிங், அபிஷேக்.

உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் 1973-ல் ஆம்ஸ்டர்டாமில் வெள்ளிப் பதக்கத்தையும், 1971-ல் பார்சிலோனாவில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றதைத் தொடர்ந்து, 1975-ல் கோலாலம்பூரில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றிருந்தது. 2023 ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற தொடரில் இந்திய அணி 9-ஆவது இடத்தைப் பிடித்தது.

தங்கப்பதக்கம் வென்ற பிறகு, இந்திய அணி அதன்பின்னர் இதுவரை எந்தவொரு உலகக் கோப்பையிலும் பதக்கத்தையும் வெல்லாதது நினைவுகூரத்தக்கது.

Summary

Hockey India have named a 20-member men's World Cup squad led by Harmanpreet Singh, with youth and experience across all lines. India have been drawn alongside Wales, England and Pakistan in the group stages of the tournament, starting August 15.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.