திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரானார் அனுராக் தாக்குர்

மும்பையில் இன்று நடைபெற்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கூட்டத்தில், புதிய தலைவராக அனுராக் தாக்குர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

News image
Updated On :22 மே 2016, 5:20 am

மும்பை: மும்பையில் இன்று நடைபெற்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கூட்டத்தில், புதிய தலைவராக அனுராக் தாக்குர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) சிறப்பு கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. இதில் பிசிசிஐ தலைவராக அனுராக் தாக்குர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இதன்மூலம் இளம் வயதில் பிசிசிஐ தலைவர் பதவியைப் பிடித்தவர் என்ற பெருமையை அவர் பெறுகிறார். பாஜக எம்.பி.யான அனுராக் தாக்குரின் வயது 41 ஆகும்.

பிசிசிஐ தலைவராக இருந்த சஷாங்க் மனோகர், ஐசிசியின் வாரியங்கள் சாரா முதல் சேர்மனாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவர் பிசிசிஐ தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார். அதைத் தொடர்ந்து புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக பிசிசிஐயின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

இதில் பிசிசிஐயின் தற்போதைய செயலாளரான அனுராக் தாக்குர், புதிய தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.