ஜகர்த்தா (இந்தோனேசியா): இந்தோனேசிய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் காலிறுதி போட்டியில் தோல்வியடைந்தார்.
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் இப்போட்டியில், கால் இறுதியில் இந்தியாவின் சாய்னா 22-24, 11-21 என்ற நேர் செட் கணக்கில் உலக சாம்பியனான ஸ்பெயினின் கரோலினா மரினிடம் தோல்வியடைந்தார்.
முதல் செட் ஆட்டத்தின் தொடக்கில் 7-13 என்ற புள்ளிகள் கணக்கில் பின்தங்கியிருந்தார் சாய்னா. பின்னர் சுதாரித்து ஆடிய அவர் 19-16 என முன்னிலைப் பெற்றார். எனினும், கடைசி நேரத்தில் செய்த சில தவறுகள் காரணமாக அந்த செட்டை 22-24 என்ற புள்ளிகள் கணக்கில் இழந்தார் சாய்னா.
இரண்டாவது செட்டில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய உலக சாம்பியனான கரோலினா தொடர்ந்து புள்ளிகளை குவித்தார். இறுதியில் அவர் 21-11 என்ற புள்ளிகள் கணக்கில் அந்த செட்டை கைப்பற்றி, சாய்னாவை வீழ்த்தினார்.
சாய்னாவை தவிர அனைத்து இந்திய வீரர்களும் ஏற்கெனவே வெளியேறிவிட்ட நிலையில், இந்தோனேசியா ஓபன் போட்டியில் இந்தியாவின் பதக்க கனவு தகர்ந்துவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
எம்.பி.க்கள் விலகல்! பாஜகவில் சில நாள்கள் மட்டுமே அமைச்சர், பின்னர் சாதாரண பணியாளர்தான்: ஹர்பல் சிங்

சின்ன மருமகள் தொடரில் இணைந்த சுஜிதா!

உ.பி.: மாணவனைத் தாக்கிய பள்ளித் தலைமை ஆசிரியர் கைது
வீடியோக்கள்

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு


