மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

வண்ண நிகழ்ச்சிகளுடன் நிறைவுற்றது தெ.ஆ. விளையாட்டு போட்டி: 308 பதக்ககங்களுடன் இந்தியா முதலிடம்

இந்தியாவில் நடைபெற்று வந்த 12-வது தெற்கு ஆசிய விளையாட்டு போட்டிகள் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் இன்று நிறைவுபெற்றது.

News image
Updated On :16 பிப்ரவரி 2016, 3:49 pm

இந்தியாவில் நடைபெற்று வந்த 12-வது தெற்கு ஆசிய விளையாட்டு போட்டிகள் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் இன்று நிறைவுபெற்றது. 12 நாள்கள் நடைபெற்ற இப்போட்டியில் இந்தியா 308 பதக்கங்களுடன் இந்தியா முதலிடம் பெற்றது.

12-வது தெற்காசிய விளையாட்டு போட்டிகள் இந்தியாவின் வடகிழக்கு நகரங்களான குவாஹாட்டி மற்றும் ஷில்லாங் நகரில் நடைபெற்று வந்தன.  இதன் நிறைவுவிழா குவஹாட்டி இந்திரா காந்தி தடகள மைதானத்தில் இன்று மாலை நடைபெற்றது.

நிறைவுவிழாவையொட்டி வடகிழக்கு மாநிலங்களின் வலிமையை காட்டும் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடக்க விழாவின் போது ஏற்றப்பட்ட தீபம் அணைக்கப்பட்டதும் கண்ணை கவரும் வான வேடிக்கை நடைபெற்றது.

மத்திய விளையாட்டு துறை அமைச்சர் சர்பானந்தா ஸ்நோவால் போட்டிகளை முறைப்படி நிறைவு செய்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் அஸ்ஸாம் மாநில முதல்வர் தருண் கோகோய், மேகாலாய மாநிலத்தின் விளையாட்டு துறை அமைச்சர் ஷெனித் எம். சங்மா மற்றும் இந்திய ஒலிம்பக் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து தெற்கு ஆசிய ஒலிம்பிக் சங்கத்தின் கொடி இறக்கப்பட்டது. அந்த கொடியை அமைச்சர் ஸ்நோவால், தெற்கு ஆசிய ஒலிம்பிக் சங்கத் தலைவர் என்.ராமச்சந்திரனிடம் ஒப்படைத்தார். அவர்  அடுத்து போட்டிகளை நடத்தும் நேபாள நாட்டின் ஒலிம்பிக் சங்க நிர்வாகியிடம் ஒப்படைத்தார்.

12 நாள்கள் நடைபெற்ற தெற்கு ஆசிய போட்டிகளில் இந்தியா மொத்தம் 308 பதக்கங்களை குவித்து முதலிடம் பெற்றது. இந்திய வீரர், வீராங்கனைகள் 188 தங்கம், 90 வெள்ளி, 30 வெண்கல பதக்கங்களை கைப்பற்றினர்.

பதக்க பட்டியல் விவரம்

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.