இன்னும் நான்கு நாட்களில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரத்தில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளது. இந்நிலையில் வீரர்கள் தங்கியுள்ள ஒலிம்பிக் கிராமத்தில், சர்வதேச அளவில் புகழ்பெற்ற 'போக்மான் கோ' விளையாட்டை விளையாட முடியாது என்பதால் சர்வதேச வீரர்கள் வருத்தத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்க உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பெறுவதற்காக உலகின் பல நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரத்தில் குவிந்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமையன்று அவர்களுக்கு என உருவாக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் கிராமத்தில்குடியேற்றப்பட்டனர்.
அங்கே வீரர்களுக்காக 31 புதிய கட்டிடங்களும் 3604 அபார்ட்மெண்ட்டுகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. பொதுவாக தங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் வசதிகள் குறித்து வீரர்கள் புகார் அளிப்பது என்பது சகஜமான ஒன்று. ஆனால் இப்பொழுது வீரர்கள் எந்த விதமான புகார் அளிக்கிறார்கள் தெரியுமா? உலகெங்கும் பிரபலமடைந்து வரும் 'செயற்கை அறிவு' திறனை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள 'போக்மான் கோ' என்னும் விளையாட்டை அங்கே விளையாட முடியவில்லை என்பது குறித்துதான்.
'போக்மான் கோ' விளையாட்டு கூகிளின் ப்ளே ஸ்டோரிலும், ஆப்பிளின் ஆப் ஸ்டோரிலும் கிடைக்கிறது. அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் கிடைக்கிறது. ஆனால் ஒலிம்பிக் நடைபெறும் பிரேசிலில் இந்த விளையாட்டு இன்னும் அதிகாரபூர்வமாக அறிமுகம் செய்யப்படவில்லை.
எனவே தங்களது அலைபேசியில் இந்த விளையாட்டை பதிவிறக்கம் செய்துள்ளவர்கள் ஒலிம்பிக் கிராமத்தில் இருக்கும் போது, அவர்களது போனில், அவர்கள் தங்கியுள்ள பகுதியின் டிஜிட்டல் வரைபடம் ஒன்று தோன்றுமே தவிர, 'போக்மான் கோ' விளையாட்டின் அடிப்படையான ஜிம், போக்ஸ்டாப் மற்றும் போக்மான் ஆகியவற்றைக் காண முடியாது.
இது தொடர்பாக கனடா நாட்டு ஹாக்கி விளையாட்டு வீரர் மாத்யூ சேர்மெண்டோ கூறும்பொழுது, "இதனால் மற்ற விளையாட்டு வீரர்களுடன் கலந்து பேச எனக்கு நிறைய அவகாசம் கிடைக்கிறது.இருந்த போதிலும் போக்மான் கோ விளையாட்டை விளையாட முடிந்தால் போட்டியின் கடினமான கால கட்டங்களில், அந்த மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு ரிலாக்சாக இருக்க அது உதவும் என்று தெரிவித்தார்.பந்து வீரர் அன்னா கிரீன் கூறும்பொழுதுது, "ஒலிம்பிக் கிராமத்தில் போக்மானைத் தேடி ஓடி விளையாட ஆசைதான்; பரவாயில்லை இதை விட அதற்குப் பதிலாக வேறு எதாவது மகிழ்ச்சியான விஷயங்களில் ஈடுபடலாம்' என்று தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக ரியோ நகர மேயர் எட்வர்டோ பயஸ் செய்தியாளர்களிடம் பேசும் பொழுது, போக்மான் விளையாட்டை விரைவில் பிரேசிலில் வெளியிட வேண்டும் என்று அதன் தயாரிப்பாளர்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வார பலன்கள் (ஏப். 24 - 30) - மிதுனம்

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் உதவி மேலாளர் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

வார பலன்கள் (ஏப். 24 - 30) - ரிஷபம்

வார பலன்கள் (ஏப். 24 - 30) - மேஷம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


