யு.எஸ். ஓபன்: 17-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார் லியாண்டர் பயஸ்!
பயஸ் - ஹிங்கிஸ் ஜோடி வெல்லும் மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இது. இதற்கு முன்பு ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் விம்பிள்டன் பட்டங்களை இந்த ஜோடி வென்றுள்ளது.


இந்த ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான யு.எஸ். ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் - மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி, அமெரிக்காவின் பெதானி மட்டெக் சான்ட்ஸ் - சாம் கியூரெரே ஜோடியுடன் மோதியது.
6-4, 3-6, 10-7 என லியாண்டர் ஜோடி இறுதிப் போட்டியை வென்றது. இந்த ஆட்டம் 1 மணி நேரம் 17 நிமிடங்கள் நடந்தது.
பயஸ் - ஹிங்கிஸ் ஜோடி வெல்லும் மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இது. இதற்கு முன்பு ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் விம்பிள்டன் பட்டங்களை இந்த ஜோடி வென்றுள்ளது.
இது லியாண்டர் பயஸ் வெல்லும் 17-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும். எட்டு ஆடவர் இரட்டையர் பட்டங்கள் மற்றும் 9 கலப்பு இரட்டையர் பட்டங்களை பயஸ் வென்றுள்ளார்.
இறுதிப் போட்டியில் ஃபெடரர் - ஜோகோவிச்
யு.எஸ். ஓபன் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ஃபெடரரும் ஜோகோவிச்சும் மோதவுள்ளார்கள்.
அரையிறுதியில் ஃபெடரர், வாவ்ரிங்காவை 6-4, 6-3, 6-1 என நேர் செட்களில் வென்றார். மற்றொரு அரையிறுதிப் போட்டியில், ஜோகோவிச், மரின் சிலிச்சை 6-0, 6-1, 6-2 என நேர் செட்களில் எளிதாக வென்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...