மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

பாகிஸ்தான் - ஜிம்பாப்வே கிரிக்கெட் தொடரை சீர்குலைக்க தற்கொலைப்படைத் தாக்குதல் முயற்சி!

கடாஃபி மைதானத்தின் மீது நடைபெற இருந்த தற்கொலைத் தாக்குதல் முயற்சி தீரமிக்க காவல்துறையால் முறியடிக்கப்பட்டுள்ளது ...

Updated On :30 மே 2015, 7:47 am

லாகூர் கடாஃபி மைதானத்தில் நேற்று நடந்த பாகிஸ்தான் - ஜிம்பாப்வே போட்டியின்போது மைதானத்துக்கு வெளியே தற்கொலைப்படைத் தாக்குதல் முயற்சி நடந்துள்ளதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. இதனால் நாளை நடக்க உள்ள 3-வது ஒருநாள் போட்டி ரத்தாகும் வாய்ப்பில்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை கொண்டுள்ளது.

கடாஃபி மைதானத்தில் பாகிஸ்தான் - ஜிம்பாப்வே இடையே 2-வது ஒருநாள் போட்டி நடந்தது. இதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது. முதல் ஆடிய ஜிம்பாப்வே அணி, 268 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணி ஆடிக்கொண்டிருந்தபோது இரவு 9 மணி அளவில், மைதானத்தின் வெளியே பலத்த சத்தம் கேட்டது. இது மைதானத்தின் உள்ளே இருந்த அனைவருக்கும் கேட்டது. ஆனால், டிரான்ஸ்பார்மர் வெடித்ததால் சத்தம் கேட்டது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தகவல் சொன்னது.

இப்போது இதைப் பற்றிய உண்மை விவரங்கள் வெளிவந்துள்ளன. நேற்று கடாஃபி மைதானத்தின் அருகே தற்கொலைப்படைத் தாக்குதல் முயற்சி நடந்ததாகவும் அதில் ஒரு காவலர் உள்பட இருவர் இறந்து போயிருப்பதாகவும் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பெர்வயாஸ் ரஷீத் கூறும்போது, கடாஃபி மைதானத்தின் மீது நடைபெற இருந்த தற்கொலைப்படைத் தாக்குதல் முயற்சி தீரமிக்க காவல்துறையால் முறியடிக்கப்பட்டுள்ளது என்றார். கடாஃபி மைதானத்தின் ஒரு கிலோ மீட்டர் அருகே உள்ள கல்மா செளக்கில், ஆட்டோ ரிக்சாவில் பொருத்தப்பட்டிருந்த காஸ் சிலிண்டர் வெடித்ததாக லாகூர் தலைமை போலீஸ் ஆமின் வாய்ன்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தால் நாளை நடக்க உள்ள 3-வது ஒருநாள் போட்டி திட்டமிட்டப்படி நடக்குமா என்கிற கேள்வி எழுந்தத. ஆனால், இதனால் பாதிப்பு நேராது. 3-வது ஒருநாள் போட்டி கட்டாயம் நடைபெறும். அனைத்து டிக்கெட்டுகளும் விற்கப்பட்டு விட்டன. 27,000 ரசிகர்கள் கிரிக்கெட் மேட்ச்சைப் பார்க்க வருவார்கள் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் அக்பர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.