டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ஐபிஎல் சூதாட்டம்: லோதா தீர்ப்பை ஆராய கங்குலி உள்ளிட்ட 4 பேர் கொண்ட கமிட்டியை அறிவித்தது பிசிசிஐ!

ஐபிஎல் பங்குதாரர்கள் பாதிக்கப்படாத வகையில் எடுக்க வேண்டிய முடிவுகள் குறித்து 6 வார காலத்துக்குள் அறிக்கை ஒன்றை...

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:01 am

எழில்

ஐபிஎல் போட்டி சூதாட்ட வழக்கில் நீதிபதி ஆர்.எம்.லோதா குழு அளித்த தீர்ப்பை அமல்படுத்துவது குறித்து ஆராய புதிய குழு அமைக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நேற்று அறிவித்தது. அதன்படி, லோதா தீர்ப்பை ஆராய நான்கு பேர் கொண்ட குழுவை பிசிசிஐ அமைத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) கீழ் இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கடந்த 2013-ஆம் ஆண்டு நடந்த 6-ஆவது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் உரிமையாளர் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இணை உரிமையாளர் ராஜ்குந்த்ரா ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முத்கல், முன்னாள் நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் விசாரணைக் குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டார்.

நீதிபதி லோதா குழுவினர் தங்களது விசாரணையை முடித்து கடந்த 14-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதில் குருநாத் மெய்யப்பனும், ராஜ்குந்த்ராவும் சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர்கள் சார்ந்த சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டது. மேலும் கிரிக்கெட் விளையாட்டுக்கு களங்கத்தை ஏற்படுத்திய குருநாத் மெய்யப்பன், ராஜ்குந்த்ரா ஆகியோருக்கு ஆயுட்கால தடையும் விதிக்கப்பட்டது.

இரண்டு முன்னணி அணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால், அடுத்த ஆண்டு (2016) ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், நீதிபதி லோதா குழுவின் தீர்ப்பை அமல்படுத்துவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசிக்க ஐபிஎல் ஆட்சிமன்ற குழுக் கூட்டம் மும்பையில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் ஆர்.எம்.லோதா குழு அளித்த தீர்ப்பை அமல்படுத்துவது குறித்து ஆராய புதிய குழு அமைக்கப்படும் என்று பிசிசிஐ நேற்று அறிவித்தது. அதன்படி, லோதா தீர்ப்பை ஆராய நான்கு பேர் கொண்ட குழுவை பிசிசிஐ அமைத்துள்ளது.

ராஜிவ் சுக்லா (ஐபிஎல் தலைவர்), அனுராக் தாக்கூர் (பிசிசிஐ செயலாளர்), சவுரவ் கங்குலி (முன்னாள் இந்திய கேப்டன்), அனிருத் சவுத்ரி (பிசிசிஐ பொருளாளர்) ஆகியோர் கொண்ட குழு லோதாவின் தீர்ப்பை ஆராய்ந்து ஒரு முடிவை எடுக்கும். இந்தக் குழுவுக்கு பிசிசிஐயின் சட்ட வல்லுநர் பேனர்ஜி உதவி செய்வார் என்றும் பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தக் குழு சட்டநிபுணர்களுடன் ஆலோசித்து, ஐபிஎல் பங்குதாரர்கள் பாதிக்கப்படாத வகையில் எடுக்க வேண்டிய முடிவுகள் குறித்து 6 வார காலத்துக்குள் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கும். அந்தக் குழுவின் பரிந்துரைகள் குறித்து ஆலோசித்தப் பின்னர் பிசிசிஐ-யின் அதிகாரமிக்க செயற்குழுவிடம் சமர்பிக்கப்பட்டு, அதன் பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.