சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

பாக். வீரர் முகமது ஹபீஸ் பந்துவீச ஒரு வருடம் தடை! ஐசிசி அதிரடி

ஹபீஸ், தனது பந்துவீச்சை ஓராண்டு கால தடைக்குப் பிறகே மறுமதிப்பீடு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On :17 ஜூலை 2015, 9:34 am

இரண்டாவது முறையாக முறையற்ற பந்துவீச்சுக்காக பாகிஸ்தான் ஆல் ரவுண்டர் முகமது ஹபீஸூக்குத் தண்டனை அளித்துள்ளது ஐசிசி. அவர் சர்வதேச கிரிக்கெட்டில் பந்துவீச ஒரு வருடம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான காலே டெஸ்ட் போட்டியின்போது ஹபீஸின் பந்துவீச்சு குறித்து புகார் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை ராமச்சந்திரா பல்கலைக் கழகத்தில் அவர் பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவரது முழங்கை அனுமதிக்கப்பட்ட 15 டிகிரி அளவைக் காட்டிலும் அதிகமாக மடங்கியது தெரியவந்தது.  இதனால் அவர் அடுத்த ஒருவருடத்துக்கு பவுலிங் செய்ய தடை விதித்துள்ளது ஐசிசி. ஹபீஸ், தனது பந்துவீச்சை ஓராண்டு கால தடைக்குப் பிறகே மறுமதிப்பீடு செயய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்ற வருடம், நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது ஹபீஸின் பந்துவீச்சு குறித்து சந்தேகம் எழுந்தது. அதைத்தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச அவருக்குத் தடை விதிக்கப்பட்டது. பிறகு அவர் பவுலிங் செய்யும் முறையை மாற்றிக்கொண்டதால் ஏப்ரல் 2015 முதல் மீண்டும் பவுலிங் செய்ய அனுமதிக்கப்பட்டார். ஆனால் இப்போது மீண்டும் அதே சிக்கலில் மாட்டியுள்ளதால் அவருக்கு ஒருவருடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.