இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதும் டேவிஸ் கோப்பை ஆசியா-ஓசியானா குரூப்-1 டென்னிஸ் போட்டி நியூஸிலாந்தில் இன்று தொடங்கியது.
இன்று நடைபெற்ற முதல் ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன், நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ்சை எதிர்த்து ஆடினார். இதில் சோம்தேவை 4-6, 4-6, 6-3, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் போராடி வென்றார் மைக்கேல் வீனஸ். முதல் இரண்டு செட்களை வென்றபிறகு சோம்தேவால் அடுத்த 3 செட்களில் ஒன்றைக் கூட வெல்ல முடியாமல் போனது துரதிர்ஷ்டம். தரவரிசையில் சோம் தேவ் 148-வது இடத்திலும் வீனஸ் 548-வது இடத்திலும் உள்ளார்கள்.
முதல் போட்டியில் தோற்றுப் போனதால் அடுத்த ஒற்றையர் ஆட்டத்தில் கட்டாயமாக வெல்லவேண்டிய நிலை இந்திய அணிக்கு ஏற்பட்டது. இதில் 151-வது தரவரிசையில் உள்ள இந்தியாவின் யுகி பாம்ப்ரி, 345-வது இடத்தில் உள்ள ஜோஸ் ஸ்டாதமைச் சந்தித்தார். 6-2 6-1 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார் பாம்ப்ரி.
இதனால் முதல் நாளில் 1-1 என இரு அணிகளும் சமநிலையில் உள்ளன.
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, செப்டம்பரில் நடக்க உள்ள உலக குரூப் பிளே ஆஃப்' சுற்றுக்கு முன்னேறும். நியூசிலாந்தில் தற்போது 5-7 டிகிரி வெப்பம் நிலவுகிறது. எதிர்த்து விளையாடும் வீரர்களை விடவும் சீதோஷ்ண நிலையே இந்திய வீரர்களுக்குப் பெரிய சவாலாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேசியவாத காங்கிரஸ் தலைவா் கொலை வழக்கு: அமித் ஜோகிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்

ஆம்பூரில் அமைதியாக முடிந்த வாக்குப் பதிவு

பெட்ரோலியப் பொருள்கள் தடையற்ற விநியோகம்: இந்தியன் ஆயில் உறுதி
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

