ஹராரேவில் நடைபெறும் இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. முதல் 11 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் குவித்துள்ளது.
ஐபிஎல்-லில் முத்திரை பதித்த 22 வயது வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் சர்மா இந்தப் போட்டியில் அறிமுகமானார். அவருடைய முதல் சர்வதேச போட்டி இது. மனிஷ் பாண்டே, கெதர் ஜாதவ், அக்ஷர் படேல், பின்னி ஆகியோரும் முதல்முறையாக டி20 போட்டியில் அறிமுகமாகிறார்கள்.
முதல் இரண்டு ஓவர்கள் அமைதியாக ஆடிய தொடக்க ஆட்டக்காரர்கள் விஜய்யும் ரஹானேவும் அதன்பிறகு வேகமாக ஆட ஆரம்பித்தார்கள். அதிலும் விஜய் 5-வது ஓவரில் மட்டும் 15 ரன்கள் எடுத்தார். அதில் ஒரு சிக்ஸரும் அடங்கும். ஆறாவது ஓவரிலும் இரண்டு பவுண்டரிகள் அடித்தார் விஜய். பரபரப்பாக ஆடிவந்த விஜய், 7-வது ஓவரின் கடைசிப் பந்தில் ரன் அவுட் ஆனார். அவர் 19 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். 5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர். பிறகு 10-வது ஓவரில் 33 ரன்களில் அவுட் ஆனார் கேப்டன் ரஹானே. 11-வது ஓவரின் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேசியவாத காங்கிரஸ் தலைவா் கொலை வழக்கு: அமித் ஜோகிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்

ஆம்பூரில் அமைதியாக முடிந்த வாக்குப் பதிவு

பெட்ரோலியப் பொருள்கள் தடையற்ற விநியோகம்: இந்தியன் ஆயில் உறுதி
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

