பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

முதல் டெஸ்ட்: இலங்கை அணி தடுமாற்றம்! அஸ்வின் அசத்தல்!

23 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது இலங்கை அணி.

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:25 am

சநகன்

கேலேவில் தொடங்கியுள்ள இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்டில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இந்திய பவுலர்களின் அசத்தலான பந்துவீச்சால் இலங்கை அணி 23 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

முதல் டெஸ்டில், டாஸ் வென்ற இலங்கை அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில், தவான், ராகுல், ரோஹித் சர்மா, கோலி, ரஹானே, சஹா, அஸ்வின், ஹர்பஜன் சிங், மிஸ்ரா, ஆரோன், இஷாந்த் சர்மா ஆகியோர் இடம் பிடித்துள்ளார்கள்.

எட்டு ஓவருக்குள் தொடக்க வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தியது இந்திய அணி. கருணாரத்னே, இஷாந்த் சர்மாவின் பந்துவீச்சில் 9 ரன்களிலும் சில்வா, ஆரோன் பந்துவீச்சில் 5 ரன்களிலும் ஆட்டம் இழந்தார்கள். பிறகு தனது அசத்தலான பந்துவீச்சால் சங்கக்காரா(5), லஹிரு திரிமானி(13), முபாரக் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தினார்.

இதனால் உணவு இடைவேளையின்போது 23 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது இலங்கை அணி. மேத்யூஸ் 26, சண்டிமல் 5 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.